இந்திய பிரதமரை பேசவிடாமல் கூச்சலிட்ட வழக்கறிஞர்

இந்தியத் தலைநகர் தில்லியில் பன்னாட்டு சட்ட மாநாடு ஒன்றில் உரையாற்ற முற்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவிடாமல் வழக்கறிஞர் ஒருவர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான குறித்த எதிர்ப்பாளர் தனது மேல்சட்டையை கழற்றியபடி, மேசை மீது ஏறிநின்று பிரதமருக்கு எதிரான கோசமிட்டார். இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார்.

அதன்போது, குறித்த எதிர்ப்பாளரை அரங்கிலிருந்து வெளியேற்றும்வரை காத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், அதன்பின்னர் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பவும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியமானவை என்று பிரதமர் மேடையில் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய சீர்திருத்த நடவடிக்கைள் நாடுமுழுவும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: