உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டது!

டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சரபை மாற்றத்துக்கு பிறகு முதன்முறையாக இன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இந்திய மத்திய அரசின் வருவாயில் தற்போது நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு அது தடையாக உள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கி தவிக்கிறது. நமது நாட்டின் உற்பத்தி வேகம் குறைந்துள்ளது. நமது ஏற்றுமதியின் அளவும் சரிந்து விட்டது. இதனால் அரசின் வருவாயில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நமது நாட்டில் எரிபொருள் விநியோகம், பாதுகாப்பு மற்றும் நிதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டினால் உள்கட்டமைப்பு பிரிவுகளில் முதலீடு செய்வதற்கு தடையாகவும் மற்றும் தாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது,” என்றார்.

TAGS: