இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடன் வழங்குகிறது ஜப்பான்

கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இன்று ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடாவை சந்தித்து இரு நாட்டு உறவு பற்றி இருவரும் ஆலோசினை நடத்தினார்.

அப்போது வெளிநாட்டு அபிவிருத்தி நிதி திட்டத்தின்கீழ் தென்னிந்தியாவின் 2-ம் கட்ட சரக்கு முனையம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புதிதாக இந்திய ரூபா 2260 கோடி அளவுக்கு கடன் வழங்க உள்ளதாக, ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றுள்ளார். மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக உள்ள டெல்லி மெட்ரோ ரெயில் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் ஜப்பான் நிறுவனங்களின் முதலீட்டுக்கே இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் பிரதமர்கள் கடந்த 16-ம்தேதி டோக்கியோவில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஜப்பானில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

TAGS: