7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை; இந்திய மத்திய அரசு தகவல்

job-lessindiansடெல்லி: இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என்று ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி திட்டங்களால், கடந்த 20, 30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவற்றால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுகின்றன. என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி சர்வே அமைப்பு, 2009 – 10ம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் படி, நாடு முழுவதும், ஏழு கோடி பேருக்கு, வேலையில்லை அல்லது அவர்களுக்கு, போதுமான வேலை இல்லை என்ற நிலை காணப்படுகிறது.

TAGS: