விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ்

viswaroopamசென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தை காணும் ஆவலுடன் தியேட்டர்களின் குவிந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களின் முன்பாக கமல் ரசிகர்கள் குவிந்து நிற்கின்றனர்.

சில தியேட்டர்களில் படத்தைப் போட்டு விட்டனர். இருப்பினும் சில ஊர்களில் தியேட்டர்களில் 12 மணிக்கு மேல்தான் முதல் காட்சி என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.

ஆனால் போலீஸார் திடீரென இன்று கமல் ஹாசன் ரசிகர்களுக்கு எதிராக மாறினர். தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களை அவர்கள் படமெல்லாம் போட மாட்டாங்க என்று கூறி தடியடி நடத்தி விரட்டியடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் போலீஸார் ரசிகர்களை விரட்டியடிப்பதாக தவகல்கள் வந்து கொண்டுள்ளன.

TAGS: