சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது – விக்கிலீக்ஸ்

sanjay-gandhiடெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது.

1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது.

மேலும் அதில் கூறுகையில், ஆகஸ்ட் 30 அல்லது 31ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அப்போது சஞ்சய் காந்தியை மூன்று முறை அந்த நபர் சுட்டார். ஆனால் சஞ்சய் காந்தி பெரும் காயம் ஏதுமில்லாமல் உயிர் தப்பி விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையிடமிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றதாகவும் அமெரிக்க தூதர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

TAGS: