பெங்களூரு : பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குவெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.