இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

patrolஇந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் ‘தக்க நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார்.

இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார்.

ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்திய நிலப்பரப்புக்குள் சீனப்படையினர் நுழைந்துள்ளதாக வெளியானத் தகவல்களை சீன அரசு மறுத்துள்ளது.

இந்திய எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மறுத்தார்.

இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது.

இந்த எல்லை சர்ச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக இருநாட்டு அரசுகளும் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளன.

TAGS: