ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார்.
பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது.
நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சட்ட அமைச்சர் மாற்றம் செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட நிலையில் அவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோருகின்றன.