சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த்தாய் சிலை ஒன்று நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும் கட்டிடக்கலை நாகரீகப் பெருமைகளையும் உலகுக்கு பறைசாற்றும்படி தமிழ்த்தாய் சிலை அமையும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரிகளை உருவாக்கி, தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்றும் அவர் சட்டமன்றத்தில் கூறினார்.
மேலும் சிறந்த தமிழறிஞர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் பல்வேறு விருதுகள் தவிர, இனி திருக்குறள் முதலான அரும்பெரும் இலகியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் மற்றும் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் ஆகியோர் நினைவாகவும் விருதுகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கென சிறந்த மென்பொருள் உருவாக்குவோருக்கு ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ வழங்கப்படும் என்றும் ஜெயலலிதாஅறிவித்தார்.
தமிழ் தாய்க்கு சிலை ! வெளங்கிடும் தமிழ் நாடு,போவோர் வருவோர் அந்த சிலையை நக்கி விட்டு செல்வதற்கா? .முட்டாபயல்களா .தமிழ் நாட்டுக்கு தேவை தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு.
ஜெயலலிதாவின் உருவத்தில் ஒரு சிலையைத் திறந்துவைத்து அதைத் தமிழ்த்தாய்ச் சிலை என்று ஆர்ப்பரிக்கப் போகிறது அ.தி.மு.க.வின் ஜெயலலிதா ஆட்சி!
வறுமை தாங்கள் விவசாயி தற்கொலை செய்கிறான். தமிழ்த் தாய் சிலைக்கு நூறு கோடியா? அரசாங்கப் பள்ளிகளில் ஆங்கிலம் வழி பாடம் நடத்த வேண்டும். இங்கு தமிழ்த் தாய் கொலை. சிலைக்கு நூறு கோடி செலவு. நன்றாக நடிக்கிறார் கர்நாடக இறக்குமதி!
நடிகை குஷ்புவுக்கே கோவில் கட்டியவர்கள்…வேறென்னதான் செய்ய மாட்டார்கள்? அதற்கு மேலாக, இங்குள்ள சுற்றுலா பயண நிறுவனங்கள் “ஜெயலலிதம்மன் கோவில்” என்று புதிதாக ஒரு சுற்றுலாத் தளத்தை விளம்பரப் படுத்தாமல் இருந்தால் சரி.
கந்து வட்டி வாங்கி விவசாயம் செய்யும் தமிழ் நாட்டில் தமிழ் தாய்க்கு 100 கோடி செலவில் தமிழ் தாய் சிலையா ? இது என்னமோ கலைஞரை கடுப்பேத்தும் செயல் போல் உள்ளது ! இப்படி ஒரு லுபாங் கலைஞருக்கு தெரியாமல் போனதே !
நாடு சில ஆண்டுகளாக மின்சாரம் போதிய அளவு (சில இடங்களில் 18 மணி நேரம் மிசாரம் இல்லையாம்) இல்லாமல் அவதிப்படுகிறது .
தொழில் சாலைகள் அங்கும் இங்கும் மூடிக்கொண்டு போகிறநிலையில்
மக்கள் தற்கொலை பண்ணிக்கொண்டு சாவதும் நடக்கிறது !
இன்னும் தண்ணீர் பிரச்னை …இப்படி ஆயிரம் மக்கள் நல பிரச்னைகளை வைத்துக்கொண்டு அறிவிலி போல் ஆட்சி நடத்தும்
நீ எல்லாம் உனக்கு என்று ஒன்று வரும் வேளை தான் உணர்வாய் .
மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடு …சினிமாவில் நடித்தது போல்
இதிலும் நாடகம் காட்டாதே !
தமிழ் நாட்டில் முதலில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வரட்டும்.பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தை போதித்துவிட்டு தமிழ் தாய்க்கு சிலைவடித்தால் அப்புறம் தமிழ் நாட்டான் இன்னொரு தமிழ் நாட்டானை[காட்டானை] பார்த்து கேட்ப்பான் ‘இது யாருடைய சிலை என்று?’