ஐபிஎல் போட்டி முறைகேடுகள்: மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

shikhar_dhawanஇந்தியா மட்டுமல்லமால் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலமாகவும் பல கோடி ரூபாய்கள் பணம் புழங்கும் ஐ பி எல் போட்டிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்ரீசாந்த, அன்கித் சவான் மற்றும் அஜித் சந்திலா ஆகியோர், குறிப்பிட்ட நேரங்களில் முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் அதாவது ஸ்பாட் ஃபிக்ஸிங் முறையில் பந்து வீச உடன்பட்டிருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 11 சூதாட்ட முகவர்கள் அதாவது புக்கிகளையும் தாங்கள் கைது செய்துள்ளதாக டில்லி போலிஸ் ஆணையாளர் நீரஜ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்தே சர்ச்சைகளும் தொடர்ந்தன. இப்போட்டிகளை உருவாக்கி செயல்வடிவம் கொடுத்து வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற லலித் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அணிகளின் உரிமையாளர்கள் மீது இந்தியாவின் வருமான வரித் துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

TAGS: