பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இந்திய ஆப்கான் தலைவர்கள் பேச்சு

karzai_manmohanஇந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பின்னேரம் சந்தித்து பேசுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்கக் கோரி கர்சாய் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது.

ஆப்கானிய அதிகாரிகளுக்கு இந்தியா ஏற்கெனவே பயிற்சி அளித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டின் இறுதியில், நேட்டோ தலைமையிலான படைகள் விலகிக் கொள்ள ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அங்கு தமது ஆளுமையை அதிகரித்துக் கொள்வதில் இந்தியா சில கடினமான முடிவுகளை எதிர்நோக்குகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவது, பாகிஸ்தானுடனான பலவீனமான உறவுகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

TAGS: