இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

arunimaSINHAAADஇந்தியாவைச் சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற ஒரு காலை மட்டுமே கொண்ட பெண் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த இளம் பெண் அருணிமா சின்ஹா . உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவரின் வயது 25.

தேசிய அளவில் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். 2011ம் ஆண்டு லக்னோவிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

ரயிலில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் இருந்து உடமைகளை திருடினர். அவர்களை எதிர்த்து போராடிய அருணிமாவை தாக்கிய கொள்ளையர்கள் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்தனர்.

அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயில் மோதி பலத்த காயமடைந்த அருணிமா, ஒரு காலை இழந்தார்.

முழங்காலுக்கு கீழே அவரின் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த அவர் பல மாதங்கள் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார்.

பிறர் தன்னை பரிதாபமாக பார்ப்பதை தவிர்க்க மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என நினைத்த அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலையேற்றக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய உலகின் முதல் இந்தியப் பெண் என போற்றப்பட்ட பச்சேந்திரி போல் காலை இழந்த அருணிமாவுக்கு பயிற்சி அளித்தார்.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உச்சியை நேற்று காலை, 10:55 மணிக்கு அடைந்த அருணிமா இந்த சாதனையை படைத்த ஒரு காலை இழந்த முதல் இந்தியப்பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

TAGS: