டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் எல்லைப்பிரச்சினைக்கான தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. மேலும் இப்பேச்சு வார்த்தையில், 8 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. பின்னர், நேற்று டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில், இந்திய தொழில் வர்த்தக சபை (பிக்கி) ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே லீ கெகியாங் பேசினார்.
இந்தியா மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் என்பதை விட கூட்டாளிகள் என்றுதான் சொல்வேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, மிகப்பெரிய சந்தையுடன் ஒவ்வொரு தரப்பும் முன்னேற்றம் அடைவது என்பது அவர்களது மக்களுக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் புதிய என்ஜின்களாக இணைந்து செயல்படும் என்றார் லீ கெகியாங்.
ஆமாம்! நீங்க ரெண்டு முதேவிகளும் கூட்டாளிகள்,ஈழ தமிழர்கள் எதிரிகள்!!!