சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் சேமிப்பு இந்த ஆண்டு ரூ.9000 கோடியாக குறைந்தது

currencyஉலக ரகசிய வங்கியாக இருந்து வரும் சுவிஸ் வங்கியில் உலக பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் பணத்தை வைப்புத் தொகையாக வைத்து மறைத்து வருகின்றனர்.

அதுபோல் இந்தியாவில் பண முதலைகளும், அரசியல்வாதிகளும் தாங்கள் சேர்த்த பணத்தை அந்த வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு இந்தியர்கள் சேர்ந்து வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு மட்டும் பல லட்சம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுவிஸ் வங்கியின் ரகசிய சுவர் உடைக்கப்பட்டு அங்கு டெபாசிட் செய்துள்ள உலக மற்றும் இந்திய பண முதலைகளின் பணப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் அந்த வங்கி உலக நெருக்கடிகளுக்கு ஆளானது. இதனையடுத்து சுவிஸ் வங்கி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

இந்த வருடம் இந்தியர்கள் 9,000 கோடி ரூபாய் வைப்பு மற்றும் சேமிப்பு தொகையாக செலுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டு டெபாசிட் செய்யப்பட்டதைவிட 35 சதவிகிதம், அதாவது 4,900 கோடி ரூபாய் குறைவாகும். இது சுவிஸ் வங்கி வரலாற்றிலேயே இந்தியர்களின் மிகக்குறைவான சேமிப்பு என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு சுமார் ரூ.156 லட்சம் கோடி மொத்த வைப்புத்தொகை இருந்தது. ஆனால் இப்போது அது 60 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

TAGS: