ஒரு நடிகர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட குணங்களால் மற்றவர்களைக் கவர்ந்தவர் அஜித்குமார். கேமரா முன் நிற்பதைத் தவிர மற்ற சமயத்தில் சாதாரண குடிமகனாக வாழ நினைப்பது, மனதில் தோன்றியதை நேராக பேசும் துணிவு என சொல்லப்படும் அஜித்தின் குணாதிசயங்களில், மேலும் ஒன்றை இனி அஜித் ரசிகர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
சமீபத்தில் அஜித்தின் நண்பர் ஒருவர் அஜித்துக்கு ஒளவையாரின் ஆத்திச்சுவடி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உபயோகிக்குமாறு கூறியிருக்கிறார். இண்டர்நெட்டில் இதுபோன்று ஆயிரக்கணக்கான போலி அப்ளிகேஷன்கள் இருப்பதால், இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட அஜித் பிறகு தான் அது உண்மையிலேயே ஒளவையாரின் ஆத்திச்சுவடி என்பதை உணர்ந்திருக்கிறார்.
அப்போதிலிருந்து ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆத்திச்சுவடியை படிப்பதோடு, அதில் குறிப்பிட்டுள்ள வாக்கியங்களை தனது நெருங்கிய நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் நேரில் சந்திக்கும் நண்பர்களிடமெல்லாம், அந்த அப்ளிகேஷனைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் படிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறாராம்.
அப்படியா சங்கதி, எங்கடா வேலக்கமாருகள… ஒரு நடிகன் சொன்னாதான் கேப்பெங்கலாடா, கேப் மாறிகளா, அப்ப ஒளவையார் சொன்னார்களே நீங்க கேட்கவே இல்லையா, அட நாசமா போனவனுங்க்கள ,அப்படி என்றால் கமலஹாசன் வது திருக்குறளை படின்னு சொன்னாதான் படிப்பெங்கலாடா? திருவள்ளுவர் வந்து நான் எழுதிய குரலை படி என்று சொன்னால் படிக்க மாட்டேங்கலாடா? திருக்குறளை எழுதியது அஜிதுன்னு சொன்னாலும் சொல்லுவேங்க்கடா,நாசமா போனவனுங்க்கள
நியாயமான வரிகள் மிஸ்டர் கை குந்தா… வாழ்க நீ வளமுடன்…
விடுங்க மிஸ்டர் கை குந்தா…இப்படியாவது நம் இனத்தில்உள்ள முட்டால்கள் திருந்தட்டும். மன்னிக்கவும்.மன வேதனையில் தவறான வார்த்தைகளை உதறியதட்கு…