பள்ளி உணவில் விவசாய பூச்சிகொல்லி மருந்து: பிஹார் பொலிஸ்

india21713aஇந்தியாவின் பிஹார் மாநிலத்தில் இவ்வாரம் முன்னதாக பள்ளியில் மதிய உணவு உண்டு 23 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தில், அந்த உணவில் பயன்படுத்தப்பட்டிருந்த சமையல் எண்ணெயிலும், மிஞ்சிய உணவிலும் மிக அதிக அளவிலான விவசாய பூச்சி கொல்லி மருந்து இருந்ததென தற்போது தெரியவந்துள்ளதாக இந்தியப் பொலிசார் கூறுகின்றனர்.

இவற்றிலிருந்து மாதிரிகளை எடுத்து நிபுணர்கள் பரிசோதித்ததில் ஆர்கானோ பாஸ்பரஸ் இரசாயனங்கள் உணவு நஞ்சாகும் விதமாக அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அரசாங்க இலவச பள்ளி உணவு திட்டத்தின்கீழ் இங்கு மதிய உணவு உண்ட 5 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட 23 பிள்ளைகள் இறந்துபோனார்கள்.

மேலும் இருபது பிள்ளைகளுக்கும், பள்ளியின் சமையல்காரருக்கும் உணவில் விஷம் கலந்திருந்தமைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். -BBC

TAGS: