இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்து சுற்றூலாப் பயணி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய நீதிமன்றம் ஒன்று 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தனது கணவனுடன் சைக்கிளில் சுற்றுப் பயணம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் இந்த 39 வயதுப் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப் பெண்ணை வன்புணர்ச்சி செய்ததாக நான்கு பேர் மீதும், இவரைத் தாக்கி கொள்ளையடித்ததாக இரண்டு பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மாணவி ஒருவர் சென்ற வருடம் கொடூரமான முறையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தம் இந்திய அரசாங்கத்தின் மீது இருந்துவருகிறது.
சிறப்பு நீதிமன்ற அமர்வொன்றே இன்று 6 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. -BBC