டெல்லியில் இளைஞர் ஒருவர் தான் கண்ட கனவால் தன் வயிற்றையே வெட்டி குடலை வெளியே உருவியுள்ளார்.
கிழக்கு டெல்லி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது.
அதில் அந்த நபரின் வயிற்றில் மூன்று குழந்தைகளை யாரோ கணினி மூலம் வலி தெரியாமல் வைத்து விட்டதாகவும், அந்தக் குழந்தைகள் பசியால் துடித்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் தோன்றியுள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கனவிலிருந்து விடுபட்டு வயிற்றைத் தடவிப் பார்த்தபோது வயிறு சற்றுப் பெரிதாக இருந்துள்ளது. இதனால் கனவில் கண்டது உண்மை என்று கருதி வயிற்றில் இருந்த குழந்தைகளை வெளியே எடுத்து அவற்றைக் காப்பாற்ற நினைத்தார்.
இதனைத் தொடர்ந்து இலவச ஆம்புலன்சுக்கு போன் செய்து விட்டு வீட்டை விட்டு கீழிறங்கி தெருவுக்கு வந்த இவர் கையில் இருந்த பிளேடால் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குடலை வெளியே எடுத்துப் போட்டு குழந்தைகளைத் தேடியுள்ளார்.
ரத்தம் வீணானதால் மயக்கமடைந்த அவர் குடலைப் பிடித்தபடி தெருவோரத்தில் சாய்ந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
தற்போது லால் பகதூ ர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரிடம் மருத்துவர்கள் இது குறித்து விசாரித்த போது தனக்கு வந்த கனவை பற்றி கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
எனினும் அவர் நலமடைந்ததும் மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளதாக மருத்துவர் கவுரவ் தெரிவித்துள்ளார்.