தெலங்கானா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது!

Balram naikதனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தனி தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

தெலங்கானாவை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது வீண். தனி தெலங்கானா மாநிலம் உருவாகப் போவதாக அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையில் இல்லை.

மேலும் ஹைதராபாத் என்பது ஆந்திரத்தில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும். யாரும் யாரையும் வெளியில் அனுப்ப உரிமை இல்லை.

அப்படி யாராவது அதைத் தடுத்தால் அதற்காக போராடாமல் மத்திய அமைச்சர் அந்தோனி தலைமையிலான கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

TAGS: