இருமொழித் திட்டத்தை அகற்ற, புத்தராஜெயாவில் பேரணி!

மே-மாதம் 19 ஆம் தேதி, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி என்ற இருமொழித் திட்ட அமலாக்கதை அகற்ற, புத்தராஜெயாவில் ஒரு பேரணியை நடத்தப் போவதாக மே19 இயக்கம் அறிவித்துள்ளது. இந்த "மே19 இயக்கம்" தமிழ்க்கல்வி மற்றும் தாய்மொழிக்கல்வி சார்ந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் தோற்றுவிப்பாகும். மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு…

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள், கூறுகிறார் சேவியர்

  “வணக்கம், அன்புடன் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் நாட்டின் இன்றைய நிலை தலைவன்  எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்ற முதுமொழிக்கு ஒப்ப நடந்து வருகிறது. நாட்டின் 60 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இந்த ஹேவிளம்பி சித்திரை புத்தாண்டை வரவேற்கின்றனர்”,…

சமய உரிமையை காப்பதில் பாக்காத்தான் முன்னணி! – கா. ஆறுமுகம்

தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தேசிய முன்னணி ஆட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல கோயில்கள் உடைபட்டன. சிலாங்கூர் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். இதைத்தான் சமூகப்   போராளி பொ. உதயகுமார்  இன அழிப்புக்கு ஒப்பான நடவடிக்கை என வன்மையாகச் சாடினார். இதற்காக தேசிய முன்னணி…

சேவியர்: ஷரியா சட்ட விவகாரத்தில் பிரதமரின் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு சபாநாயகர்…

சேவியர் ஜெயக்குமார், ஏபரல் 8, 2017. நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஷரியா நீதிமன்ற (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 பற்றிய தனிநபர் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய ஏதுவாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா  செய்திருந்த சிறப்பு ஏற்பாடுகள், பிரதமரின்…

இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு, ஏப்ரல் தினத் தமாஷா?

- டாக்டர் ஜெயக்குமார் சேவியர், ஏப்ரல் 2, 2017.   மலேசிய இந்தியர்கள் மென்மையானவர்கள்தான், இங்கு வாழும் தமிழர்கள் ஏமாளிதான் ஆனால் அவர்களை உலக மகா முட்டாள்கள் என்று பிரதமரும், ம.இ.கா தலைவர்களும் எண்ணிவிடக் கூடாது. மலேசிய இந்தியர்களான நாங்கள் முட்டாள்கள்  இல்லை என்பதைக் கூடிய விரைவில் பிரதமருக்கும்,…

இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களும் – தமிழ்ப்பள்ளிகளும் – கா. ஆறுமுகம்

இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களுக்கும்  குண்டர்தனத்திற்கும் அவ்வப்போதுத் தமிழ்ப்பள்ளிகளைச் சம்பந்தப்படுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவது போலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். வறுமைக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருந்த போதிலும் ஏழைகளின் சரணாலயமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றின் மீது வெறுமனே பழி சுமத்துவது அதன் தார்மீகத்தன்மையைப்  பாதிக்கும்.…

பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டம் 1937, நூல் வெளியீடு

  பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டீஷாரை அச்சுரங்கத்திலிருந்து விரட்டியடித்து அந்நகரைக் கைப்பற்றினர். நாட்டின் வரலாற்றில் பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு  முதல் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்கள் பத்து ஆராங் தொழிலாளர்கள். பத்து ஆராங்  தொழிலாளர்களின் 1937 ஆம் ஆண்டு வீரப் போராட்ட வரலாற்றை…

இவர்தான் அந்த மாய வித்தைக்காரரா?

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும், குறிப்பாக இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 49 தமிழ்ப்பள்ளிகளும், இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள தரத்தை அடைந்து விட்டனவா என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய…

இருமொழித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தேசியமொழிப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப்…

  இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்தம் 49 தமிழ்ப்பள்ளிகளும் (2016 இல் 30 பள்ளிகள், 2017 இல் 19 பள்ளிகள்) அந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கு கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்டிருக்கும் அடைவுநிலைகளை அடையவில்லை. இந்த 49 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப்…

இருமொழித் திட்டத்தை உடனடியாக இரத்து செய்வீர், கல்வி அமைச்சுக்கு தமிழ்…

  மலேசியத் தமிழ் அறவாரியம் இருமொழித் திட்டத்தை ஏற்கனவே நிராகரித்து விட்டது. அதன் காரணமாக, கல்வி அமைச்சு இருமொழித் திட்டத்தை வெற்று ஆரவாரம் எதுவும் செய்யாமல் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற இறுதிக்கோரிக்கையை அதன் தலைவர் அ. இராகவன் இன்று விடுத்தார். இன்று கோலாலம்பூரில்   தமிழ்…

தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் – தமிழ் அறவாரியம்

இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம்,  லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம்,  கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், இக்ராம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்பு, பூர்வீக குடிகள் அமைப்பு, மைஸ்கில்ஸ் அறவாரியம்…

இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – நாம் இருப்பதையும் இழக்க…

உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாகப் பயன்படுத்தப்படுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும், தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலகத் தாய்மொழி நாள் என்று அறிவித்தது. உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து…

வங்காள தேச மாணவர்களின் குருதியில் உருவான அனைத்துலகத் தாய்மொழி நாள்

  - சரவணன் இராமச்சந்திரன்,  பெப்ரவரி 21, 2017.   அனைத்துலகத் தாய்மொழி நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரித் திங்கள் 21-ஆம் நாள் உலககெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் பின்னணியில் குருதி சிந்திய வரலாறும் நான்கு மாணவர்களின் மரணங்களும் இருக்கின்றன என எத்தனை பேர் அறிவோம்? வரலாற்று அறிவொன்றே…