யாரும் என்னை முத்தமிடவில்லை நடிகை நக்மா மறுப்பு

யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என மீரட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நக்மா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நடிகை…

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன், சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள்

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் என்றார் வடிவேலு. வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் தெனாலிராமன். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கடந்த இரண்டரை வருடம் நடிக்காமல்…

திரைப்படத்துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தெனாலிராமன் ஆடியோ விழா!

அம்மாவின் கோபம் தீர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் வடிவேலு. ஆனால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், வடிவேலு மீதான அம்மாவின் கோபம் இம்மியளவும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை, ஆளும்கட்சியின் டி.வி.க்குக் கொடுப்பதன் மூலம் அம்மாவை குளிர்வித்துவிடலாம் என்று கணக்குப்போட்ட…

அஜித்துடன் மோதும் அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய்!

வீரம் படத்திற்கு பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் தற்போது தமிழ் திரையுலகின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்கா. படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் கௌதம் மேனனோடு இணைந்து ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இவர் இந்தியில் பிரபல…

கோச்சடையான் படத்தில் நான் திணிக்கப்பட்டேன்: ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் இந்தி பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அமிதாப்பச்சன் வெளியிட ஐஸ்வர்யா பச்சன் பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது: இந்த படம் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு தொழல்நுட்பம் பற்றி தெரியாது. இதுபோன்ற…

வீரம், கோலிசோடா, குக்கூ, தெகிடி படங்கள் மட்டுமே லாபத்தை கொடுத்து

தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு 60 படங்கள் ரிலீசான காலம் உண்டு. இப்போது மார்ச் 31 வரைக்குமான முதல் காலாண்டிலேயே 60 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி அசர வைத்திருக்கிறது. இதே ரீதியில் போனால் 2014ம் ஆண்டு 250 படங்களுக்கு மேல் ரிலீசாகி உலக சாதனை படைக்கும். முதல்…

ஆபாசம் கலந்த வசனங்களுக்குத் தடை போடும் பரோட்டா சூரி!

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பழம்பெரும் காமெடியன்கள் யாருமே காமெடி வசனங்களில் ஆபாசம் கலந்து பேசியதில்லை. வெண்ணிற ஆடை மூர்த்தி மட்டும்தான் அவ்வப்போது அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசி முகம் சுழிக்க வைத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து சந்தானமும் அந்த வளையத்திற்குள் சிக்கிக்கொண்டார். டயமிங் காமெடி என்ற பெயரில் நான் புதிதாக…

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் மனோரமா: உடல் நிலை சீராக…

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழம் பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சாதாரண சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூட்டு வலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில்…

கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : பிரணாப் வழங்கினார்

புது தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக நடிகர் கமலஹாசன், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார். கலைத் துறையில் சிறந்து விளக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த…

‘இனம்’ படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவ, "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும்…

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில்…

மொத்தத்தில் ‘வேங்கை புலி’ அதிரடி.

உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கோபி சந்த். வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊரைச் சுற்றி வரும் இவர், ஒரே மகன் என்பதால் பெற்றோர் கண்டிப்பதில்லை. அதேசமயம், கடைசி வரைக்கும் வேலைக்கு போகாமல் ஜாலியாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தவும் செய்கிறார்கள். அதே ஊரின்…

இளையராஜா ரசிகர்மன்ற தலைவராகிறார் பவதாரணி!

இளையராஜா துவங்க இருக்கும் ரசிகர்மன்றத்திற்கு அவரது வாரிசும், பிரபல பாடகியுமான பவதாரணி தலைவராகிறார். இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற…

இனம் படத்தில் ஆட்சேபத்துக்குரிய ஐந்து காட்சிகள் நீக்கம்!

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 'இனம்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 'இனம்' படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள்…

தமிழர்களுக்கு எதிரான படமல்ல “இனம்”

தமிழர்களுக்கு எதிரான படமாக "இனம்' உருவாகவில்லை என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தெரிவித்தார். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் ஒரு படத்துக்கு எதிராக வரும் புகார்கள் படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். லிங்குசாமியின் தயாரிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் "இனம்'.…

இனம் – விமர்சனம்!

ஈழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில் போரின் போது கைக்கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல இனம் என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது. அங்கே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான அடிப்படை விஷயங்களோ, காரணங்களோ படத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அங்கே நடந்ததும்... நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை…

இசைஞானி இளையராஜாவின் 999-வது படம் ‘ஒரு ஊர்ல’..!

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர்.…

குக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு!

கடந்த வெள்ளியன்று வெளியான குக்கூ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பத்திரிகையாளர் ராஜு முருகன் இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் அட்டக்கத்தி தினேஷ், நடிகை மாளவிகா ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு படம் வெற்றிபெற்றால் அதற்கு சக்சஸ் மீட்…

சந்தானத்தை ஊக்கப்படுத்திய முன்னணி நடிகர்கள்!

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் படம்  'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் இணைந்து இந்தப்…

இந்தியில் ‘நிமிர்ந்து நில்’

சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடித்திருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் பல பிரச்சனைகளுக்கு இடையில் வெளியாகி பட்டயை கிளப்பிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. டைரக்டர் ஷங்கர் இயக்கிய…

என்ன ஆனார் கலை இயக்குநர் வினோ மிர்தாத்?

மலேசியா விமானம் மாயமானதைப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு ’மாயமான’ செய்தி. பிப்ரவரி 27-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற 'மதுபானக்கடை’ படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத், வழிதவறிக் காணாமல் போனார். இன்றுவரை வனத் துறை, காவல் துறை, நண்பர்கள்... என வினோ…

”குக்கூ – ” புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர குக்கூ

'குக்கூ', கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே 'பக்கா'வாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ…

‘பனிவிழும் நிலவு’ மிதமான குளிர்ச்சி.

நாயகன் ஹிருதய், நாயகி ஈடன் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் கல்லூரியில் கேலி, கிண்டல், சேட்டை, அரட்டை என சந்தோஷமாக இருக்கிறார்கள். அதிலும் ஹிருதய் மிகவும் விளையாட்டு குணம் உடையவன். இவன் செய்யும் விளையாட்டு தனத்தால், இவர்கள் நண்பர்களின் ஒருவன் கல்லூரிக்கு வரமுடியாமல்…