குரலை மாற்றிய விக்ரம்

கெட்டப்பை மற்றுமில்லாமல் குரலையும் மாற்றி பேசுகிறாராம் சீயான் விக்ரம். சீயான் விக்ரம் என்றாலே படத்துக்குப்படம் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தெரிவு செய்து நடிப்பார். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என்று அவரது வித்தியாசத்திற்கு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் மாதக்கணக்கில் பயிற்சி…

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது குறித்து இளையராஜாவிடம் கேட்காதீங்க!…

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மகேந்திரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. நடிகர்…

வெண்ணிற இரவுகள் : மலேசியத் திரையைப் பற்றி முதல் பார்வை

எதிர்வரும் 6 மார்ச் மலேசியா முழுவதும் இயக்குனர் பிரகாஷ் அவர்களின் 'வெண்ணிற இரவுகள்' வெளியீடு காண்கிறது. கடந்த 20ஆம் திகதி இப்படத்தின் சிறப்புக் காட்சியை வல்லினம் நண்பர்களுடன் காணச் சென்றிருந்தேன். ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பான அதன் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல் அனுபவம். குறிப்பாக அப்படம் முடிந்து…

வழித்தவறி போகாத இயக்குனர் பாலுமகேந்திரா – இளையராஜா!

தமிழ்த்திரையுலக வரலாற்றில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர். முல்லும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படைப்புகள் தமிழ்சினிமாவில் நீங்கா இடம்பெற்றவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கிய சாசனம் திரைப்படம் வெளியானது. அதன்பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்த இயக்குனர் மகேந்திரன் தற்போது இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறார்.…

ஷகீலாவின் சுயசரிதையில் நடிக்க மறுத்து தெறித்து ஓடும் நடிகைகள்!

கவர்ச்சி நடிகைகள்கூட சுயசரிதை எழுதும் காலமாகி விட்டது. அந்த வகையில், கடந்த சில வருடங்களாகவே தன்னைப்பற்றிய சுயசரிதை எழுதிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியிட்டு வரும் நடிகை சோனா, அதில் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட சில விஐபிக்களின் முகத்திரையினையும் கிழித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால், சோனாவின் சுயசரிதை…

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் 5.7 உயரம்தான்! -சொல்கிறார் வி.சி.குகநாதன்

நடிகர்கள் தாங்கள் உயரம் குறைவாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் இயக்குனரும், எழுத்தாளருமான வி.சி.குகநாதன். சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர், அப்படத்தின் நாயகன் நார்மலான உயரத்தில் இருப்பதைப்பார்த்து அனைவரும் கதாநாயகன் ரொம்ப சிறுவனாக இருப்பதாக பேசினார்கள். அதைப்பார்த்த வி.சி.குகநாதனோ, சினிமா…

புதுப்பொலிவுடன் மீண்டும் களமிறங்கும் தேவா

தமிழில் பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவர் இசையமைத்த அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களின் பாடல்கள் வெற்றியடைந்தது. மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி அந்தப் பாடலைத் அவரே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். நீண்ட…

எந்திரன், இந்தியன் 2–ம் பாகம் தயாராகிறது: ரஜினி, கமல் நடிக்கின்றனர்

ரஜினி, கமலுக்கு எந்திரன், இந்தியன் படங்கள் மெகா ஹட் படங்களாக அமைந்தன. இருவருமே இப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தனர். ஷங்கர் இயக்கினார். இந்தியன் படம் 1996–ல் ரிலீசானது. சுமார் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.30 கோடி வசூல் ஈட்டியது. இப்படத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.…

இசைப்புயல் நாயகனுக்கு பிடிக்காத வார்த்தை

ஒஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காத வார்த்தை ஒன்று உள்ளதாம். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்துக்காக 2 ஒஸ்கர் விருதுகளை வென்றார். அவரது புகழை…

குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர்…

அஜித் – விஜய் இருவரும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு” இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை; மத்திய அரசுக்கு முதல்வர் கொடுத்த மரண…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிவிப்பிற்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது: 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை, 22 வருட அனைத்துலக தமிழர்களின்…

பணம் வாங்கிகொண்டு நடிக்கும் கமலுக்கு பத்மபூஷண் எதற்கு? தங்கர் பச்சான்

தனது அதிரடி பேச்சால் கோடம்பாகத்தை அதிரவைத்து வருபவர் தங்கர் பச்சான். தற்போது நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கொடுக்கப்பட்டதை விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மத்திய அரசு கமலுககு பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த விருதை இன்னும் சில தினங்களில் தில்லி சென்று வாங்கவிருக்கிறார் கமலஹாசன். இந்த…

சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தான்: கமல்…

ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘குக்கூ’. இப்படத்தின் மூலம் ராஜுமுருகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் ஆகியோர் பார்வையற்ற காதலர்களாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ…

இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இது கதிர்வேலன் காதல்! தாத்தா கலைஞர் கருணாநிதி எனும் கே.கே. என்பதாலோ என்னவோ தான் நாயகராக நடிக்கும் படங்களில் எல்லாம் டைட்டிலில் இரண்டு கே வருவது மாதிரி பார்த்துக் கொள்ளும்…

தெரியாத விஷயங்களை மேடைகளில் தெரிந்து கொள்ளலாம்: நடிகர் சத்யராஜ்

தெரியாத சில விஷயங்களை மேடைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று நடிகர் சத்யராஜ் பேசினார். அந்திமழை பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் பாமரன் எழுதிய "சொதப்பல் பக்கம்' நூல் வெளியீட்டு விழா, கோவையில் உள்ள பாரதிய வித்யா பவன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து…

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் “ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்”!

பி.வாசுவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ‘ஐஸ்வர்யாவும், ஆயிரம் காக்காவும்’ என பெயரிட்டுள்ள இந்தப்படத்தின் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு…

தலைவாவை பின்னுக்குத் தள்ளிய கோச்சடையான் டிரைலர்!

ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இந்தப் படம் வெளியாகி 3 ஆண்டுகள்…

இளைஞர்களுக்கு கொலை செய்யும் ஊக்கத்தை கொடுத்த மோகன்லால் படம்!

சினிமா என்பது மிகப்பெரிய சாதனம். அதன்மூலம் பொதுமக்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளை விட தவறான விசயங்கள் எளிதில் ரீச் ஆகிவிடுகிறது. அதனால்தான் தவறான விசயங்களை வடிகட்டி படங்களை வெளியிட அனுமதி கொடுப்பதற்காக சென்சார்போர்டு என்ற அமைப்பு உள்ளது. ஆனபோதும், சில படங்கள் அந்த சட்டதிட்டங்களையும் உடைத்து விட்டு வெளியே வந்து…

2015 ல் அஜீத்தின் சம்பளம் 50 கோடி?

2015 ஆம் ஆண்டு அஜீத்திற்கு ஒரு படத்தில் நடிக்க 50 கோடி தரவுள்ளதாக  தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறிவருவதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் பரவியுள்ளன. தமிழ்சினிமாவில் அஜீத்தால் வாழ்ந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர் என்றாலும் முழுமையாக வாழ்ந்தவர் ஏ.எம்.ரத்னம்தான். பிரம்மாண்ட படங்களை எடுத்து  பெரும் வெற்றி பெற்றவர்…

இது கதிர்வேலன் காதல்

காதலர் தினத்தன்று காதலை மையப்படுத்தி வெளிவந்துள்ள படமே ‘இது கதிர்வேலன் காதல்’. தங்களது முதல் படைப்பான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சுந்தர பாண்டியன்’ படங்களின் வெற்றியை இப்படத்திலும் தக்க வைத்திருக்கிறார்களா நடிகர் உதயநிதியும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும்? படத்தின் ஆரம்பத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஒரு நபரை…

விரல்வித்தக நடிகரின் குடும்பம் மதம் மாறியது உண்மையா? கோலிவுட்டில் மேலும்…

யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு,…

பாலுமகேந்திரா- ஓர் சகாப்தம்

தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவரது மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தனது திரையுலக பயணத்தை ஒரு ஒளிப்பதிவாளராக 1972ம் ஆண்டு ஆரம்பித்த பாலு மகேந்திரா, 42 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும்…

திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம்! கதறி அழுத பாரதிராஜா, பாலா

மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74. ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1977ம் ஆண்டு கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக…