ஐ.நா அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: அல் ஹுசேன்

இலங்கை தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத் தொடரின் 3ஆவது குழுக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், 2014 ஓகஸ்ட் தொடக்கம்…

பரணகமவின் அறிக்கையும் பழுதாகிப் போகுமோ!

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி - மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ஆணைக்குழுவின் அறிக்கை நடந்த உண்மைகள் பலவற்றை உறுதி செய்வதாக இருப்பது கண்டு மனம் ஆறுதல் அடைகிறது. சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை பொய்யானவை என்று ஓரம்கட்டி விட முடியாது என்று குறிப்பிடும் ஆணைக்குழு,…

வெளிநாட்டு நீதிபதிகள் வராவிட்டால் வெளிநாட்டுப் படைகள் வரும்

பொதுநலவாயம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னத்துடன் உள்ளக விசாரணை நடைபெறுமாக இருந்தால், அது நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயலாக இருக்கும் என்றும் உள்ளக விசாரணையில் பங்கேற்க வெளிநாட்டு நீதிபதிகள் வருவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றி ணைந்த எதிர்க்கட்சிகளின் மகிந்த அணியின் முக்கியஸ்தரான…

“வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா விரும்பியது”

இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும், காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த…

மஹிந்தவின் பரணகம ஆணைக்குழுவும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரை: சுமந்திரன்…

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாகவும், இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும்,  அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில்…

யார் சொன்னது புலிகளுக்கு ஆதரவு இல்லை என்று ? தமிழினி…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக…

இறுதிப் போரில் பொதுமக்களின் படுகொலைக்கு புலிகளே பெருமளவில் பொறுப்பு! பரணகம…

இறுதிக்கட்டப் போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றொழித்ததாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் தொடரில் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த மெக்ஸ்வெல் பரணகம மற்றும் உதலாகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில்…

தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! பாரதியின் வரிகளுக்கு விடுதலைப்போராட்டமே செயல் வடிவம்…

“ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

தமிழினி புற்று நோயில் இருந்தவேளை எவரும் கண்டு கொள்ளவில்லை: இப்போது…

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991ம் ஆண்டு முதல் தன்னை இணைதுக் கொண்ட்வர் சிவகாமி. அனைவராலும் தமிழினி என்று அறியப்பட்டவர். புலிகளின் அரசியல் துறை , மற்றும் மகளீர் அணிப் பொறுப்பாளராகவும் அவர் கடமையாற்றி இருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் யுத்தத்தி தோல்வியைத தழுவிய சமயத்தில்…

போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினருக்காக கருணைச் சபை!

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினருக்காக கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும். இவ்வாறான ஒரு…

கனடா பொதுத்தேர்தல்! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர்…

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில்…

தொலைக்காட்சியில் காட்டப்பட்டது பிரபாகரனின் உடல் அல்ல!

கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ, கார்கில் என அழைக்கப்படும் எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் எம்.சுப்ரமணியம் ஆங்கில இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே…

தமிழினி சாவு: கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு

இன அழிப்பு வதை முகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழினியின் சாவை இயற்கை மரணம் என்று சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் விளிப்பது அயோக்கியத்தனமானது. “புனர்வாழ்வு ” என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில்…

தமிழினி அவர்களுக்கு எங்கள் கண்ணீர் வணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக வலம்வந்த போராளி தமிழினி (சிவகாமிஜெயக்குமரன்) அவர்களுக்கு எங்கள் கண்ணீர் வணக்கம்! தலைவனையும் தமிழ் மக்களையும் தனக்கும் மேலாக நேசித்த ஒரு போராளி, ஒரு விடுதலைப் பற்றாளி 18.10.2015 காலமான செய்தி கேட்டு மனம் வருந்தி நிற்கின்றோம். எம்மக்களுக்காக…

சிங்கள நாய்கள் கறிவேப்பிலை போல பாவித்து விட்டு துாக்கி எறிந்துவிட்டார்கள்-…

தங்களின் தேவைகளுக்கு எங்களை உபயோகப்படுத்திவிட்டு இப்போ எம்மைத் கறிவேப்பிலை போல துாக்கி எறிந்துவிட்டார்கள் சிங்கள நாய்கள்‘ என கருனா குமுறியுள்ளதாக கருனாவின் வெளிநாட்டு நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.தன்னையும் கைது செய்யப்போகின்றார்கள் என்ற கிலியில் இருக்கும் கருனாவை வெளிநாட்டில் வாழும் அவனது நண்பர் தொடர்பு கொண்டு நிலமைகள்…

தமிழன் – இளிச்சவாயன்……? ஐ.நா விளக்கம்…..!

ஒரு கொலையாளியே தான் செய்த கொலையை விசாரிக்கலாம் என்று எந்த நீதிபதியாவது தீர்ப்பு எழுதுவாரா? அப்படி தீர்ப்பு எழுதினால், அந்த நீதிபதியை இந்த உலகமும் உலக மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? உலகமே கொந்தளிக்காதா? ம்ம்ம்ம்…. அப்படியொரு கொந்தளிப்பு ஏற்படவேயில்லை! கொலையாளியே அவரது கொலையை விசாரிக்கலாம் என்று ஒரு…

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின்…

பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில்…

பங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியில் சுதந்திரமாக நடமாடும் பொழுது வெறுமனே சாதாரண கைதிகளை அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் கைதிகள் தமது விடுதலையை…

காலத்தை இழுத்தடித்து நடைப்பிணமாவதை விட உயிரை விடுவதே மேல்! உண்ணாவிரத…

ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 20ற்கும் அதிகமானவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலையில் ஒருவருடைய நிலைமை மோசமடைந்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “காலத்தை இழுத்தடித்து நடைப் பிணமாவதை விட உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவதே மேல்” என்ற நிலைப்பாட்டில் தாம்…

35 பேரின் உடல்நிலை மோசம்! உண்ணாவிரதம் தொடர்கிறது! கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம்…

எமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமது விடுதலை தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆணைபெற்ற…

இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: சரத்

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஜனநாயகக் கட்சி நேற்று…

கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் கருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவிற்கு கருணா அண்மையில் அழைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ்…

ஆறு தமிழ் அரசியல் கைதிகள் தேசிய மருத்துவமனையில் அனுமதி

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த ஆறு தமிழ் அரசியல் கைதிகள் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை எங்கும் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்து, இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில்…