சரணடையும் திட்டத்துக்கு பிரபாவும் பொட்டுவும் இணங்கவில்லை!– சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த…

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் தீர்மானித்துள்ளனர். போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருப்பதாக…

ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! சவால் விடுகிறார் கருணா அம்மான்

இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல்போனோரைக் கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவின்…

“மஹிந்த,கோட்டா,முப்படையினருக்கு தண்டனை கிடையாது”

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்மையில் ஐ…

வெள்ளைக் கொடி விவகாரம் பொய்! அமெரிக்கத் தூதரக அதிகாரி கூறியதாக…

வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சரணடைந்த விவகாரம் பொய் என்று அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய லோரன்ஸ் ஸ்மித் என்பவர், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய முற்பட்டமை நம்ப முடியாத…

நிஜமான நாயகர்களும் போலிக் கதாநாயகர்களும்..!

இலங்கை ஜனாதிபதியின் இல்லமான அலரி மாளிகையில், 2008ல், ஆடம்பர பாதாள அறை ஒன்று கட்டப்படுவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியவர், சன்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் - லசந்த விக்கிரமதுங்க. அப்படி எழுதியதற்காக அவர் மிரட்டப்பட்டார், அவரது நிகழ்ச்சியை ஒளிபரப்பிவந்த தொலைக்காட்சி நிலையம் தகர்க்கப்பட்டது, உச்சக்கட்டமாக கொழும்பு நகரின் நடுவீதியில் பட்டப்பகலில் அவர்…

ஐ.நா தீர்மானம் அமுலாகுவதற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்:…

ஜெனிவா தீர்மானம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்குள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், உயிருடன் இருக்கமாட்டார்கள் என யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் வலியுறுத்தியுள்ளார். நேற்று யாழ்.வந்த சர்வதேச பெண்கள் விடயங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்ரின் றசலிடமே ஆயர் இதனை வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள்ஆணையகத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வருவதற்கே…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம்…

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன பிணை மனுவை நிராகரித்துள்ளார். பயங்கரவாத குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த கைதிகள் தொடர்பில்…

அரசாங்கம் தான் நினைத்ததை திணித்து இது தான் நல்லிணக்கம் என்று…

மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களிடம் திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின்…

அரசியல் கைதிகளின் விடுதலை ஐந்தாம் ஈழப்போரின் ஆரம்பம்! குணதாச அமரசேகர

சிறைகளில் இருக்கும் விடுதலைப் புலிகளை விடுவித்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஈழத்திற்கான போராட்டம் மீண்டும் ஐந்தாம் ஈழப்போராக உருவெடுக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து மஹிந்த ஆதரவு அணியின் முக்கிய…

பிரபாகரனின் தலை மயிருக்கு கூட மகிந்த பெறுமதியில்லாதவர்: சரத் பொன்சேகரா…

தேர்தல் நேரத்தில் சரத் பேசியதாக கூறப்படும் ஒரு செய்தியை, சமீபத்தில் தான் ஒரு சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாதாக சிங்கள ஊடகம் ஒன்று…

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமை! ஜயதிஸ்ஸ…

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமையளிக்கும் விடயம் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். ராவய பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நளின் ஜயதிஸ்ஸ எம்.பி, தேசிய அரசாங்கம் பெரிதாக எதனையும் சாதிக்கப் போவதில்லை.…

‘வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்’ – விக்னேஸ்வரன்

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம்…

தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார்.பிரமதருடனான…

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம…

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் அதன் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தது. இந்நிலையில் குறித்த…

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் இந்திய மீனவர்களின் தாக்கம் உண்டு! மகிந்த…

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் எமது நாட்டு மீனவர்களின் கோடிக்கானக்கான பெறுமதி மிக்க மீன் பிடி வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதாக கடற்றொழில் மீன் பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்…

ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! – சம்பந்தன்…

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.  குறித்த தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு!…

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை  ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென…

தமிழினியை வதைத்தது சிங்களம்.., கொன்றது தமிழ்… வெளிப்படும் உண்மைகள்…..!

தமிழினி இறக்கும் வரை யாருக்கும் தெரியவில்லை மாறாக இறந்த பின் இன்று வரை தமிழினியை பற்றி கூறாதவர்கள் இல்லை, தமிழினி இறந்தது இயற்கையானாலும் அதில் பல உண்மைகளும் மர்மங்களும் மறைந்துள்ளது. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில்…

கிளஸ்டர் குண்டுகளை பாவித்ததாக எழுதியதால் தான் எக்னலியகொட இறந்தார்- ருயிட்டர்ஸ்…

5 வருடங்களுக்கு முன்னர் காணமல் போன பிரகதீப் எக்னலியகொடவை இலங்கை அரசின் ஏஜண்டுகளே கத்திக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான ருயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும். அதில் உள்ள அனைவரும் முன் நாள் ராணுவச் சிப்பாய்கள் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இலங்கையில்…

பரணாகம மோசடி..! பரிபூரண மோசடி…!

இன்றைய திகதியின் 'நியூஸ் சென்டர்' - மாக்ஸ்வல் பரணாகம தான். 'அவரே சொல்லிவிட்டார்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே அறிக்கை விடுகிற அளவுக்கு நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது. உண்மையில், பரணாகம அறிக்கைதான், இதுவரை நடந்த மோசடிகளில் மகத்தான மோசடி. புயலில் தலைவிரித்தாடுகிற பெருமரங்களைப் போல, பேயாட்டம் போட்டது இலங்கை…

ஐ.நா. தீர்மானத்துக்கு முன் பரணகம அறிக்கை வெளிவந்திருந்தால் நாடு நாசமாகியிருக்கும்:…

ஐ.நா. தீர்மானத்துக்கு முன்னதாக மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தால் நாடு நாசமாகியிருக்கும் இதனால்தான் இந்த அறிக்கையை அரசு முன்கூட்டியே வெளியிடவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில்…

16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு: கொலை செய்த பொலிஸ்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி-…