இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
முதல்வர் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்!- சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தல்
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பி. அங்குள்ள வானொலியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் தொடர் போராட்டங்கள்! தமிழரசுக் கட்சியின்…
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் வவுனியாவில் தொடர் போராட்டங்கள் நடத்த தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை தீர்மானித்துள்ளதாக அதன் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவரும், வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் இடம்பெற்ற வவுனியா தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
வடக்கிலுள்ள இராணுவத்தை கட்டம் கட்டமாக குறைக்கப்படும்:- பாதுகாப்பு செயலாளர்
வடக்கிலுள்ள இராணுவத்தை கட்டம் கட்டமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். வெயாங்கொடையில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெயாங்கொடை – பண்டாரநாயக்க மத்திய வித்தியாலயத்தின் பழைய மாணவரான கருணாசேன ஹெட்டியாராச்சியை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய…
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம்!
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி போர் நடைபெற்ற காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை முன்னெடுத்துள்ளதுடன், நினைவாலயம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை முன்னெடுக்க விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிப்…
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! புதிய அரசியலமைப்பில் உள்ளீர்ப்பு!
இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை பெற்றுக் கொடுத்து அது புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் உள்ளக பொறிமுறை இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படுமென்றும் அறிவித்தது. பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்…
பரணகம ஆணைக்குழு மீண்டும் வட மாகாணத்தில் விசாரணை
இலங்கையில் காணாமல்போனவர்கள் குறித்து விசாரித்துவரும் ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் தமது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் வடக்கு மாகாணத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரணகம பிபிசி தமிழோசையிடம்…
இலங்கையில் முதன் முதலாக ஒரு சம்பவம்- ஐ.நா குழு விசாரணைக்கு…
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளது. பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்தப் பிரதிநிதிகள்…
அரசியல் கைதிகளின் விடுதலையினை யாரும் எதிர்க்க முடியாது: சரத் பொன்சேகா
இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.…
போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுகின்றது!- சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா பா.உ
போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது. போர் காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்கியமை…
62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில்…
தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவைக் குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றக்…
போர்க்குற்றவாளிகளை எவரும் தண்டிக்கலாம்! மஹிந்த, கோத்தா சிறையில் இருக்கவேண்டியர்கள்!! –…
போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும்,போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடிச் சம்பவம்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – சுமந்திரன்…
தமிழ் அரசியல் கைதிகள் நம்பவர் 7ம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஏம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். அத்துடன், தமிழர்கள் என்பதாலா…
நல்லிணக்கத்தை திணிக்க முடியாது: ஜப்பான் தூதுவரிடம் விக்னேஸ்வரன்
ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கெனின்சீ சுகனூமா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றிருந்தது. மேற்படி சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதன்போது பல்வேறுபட்ட…
புலிகளின் இனச் சுத்திகரிப்பு குறித்து நான் கவலை கொள்கிறேன் என்கிறார்…
விடுதலைப் புலிகள் இனப்படுகொலை செய்தார்கள் என்றும். அதற்காக தான் வெட்கப்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது அவர் குறிப்பிடுவது , புலிகள் யாழில் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்பாக வெளியேற்றிய விடையத்தை தான். இவர் யாரின் தலைவர் என்று தெரியவில்லை. மட்டக்களப்பு வீரமுனை கிராமத்தின் படுகொலை தெரியுமா இவருக்கு ? பிறந்த…
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் காதலர்களைக் கை கழுவும் யுவதிகள்! சரியும்…
நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தன்னைக் காதலித்த இளைஞனை ஏமாற்றி வெளிநாடு செல்ல முற்பட்டதால் குறித்த இளைஞன் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நீ என்னுடன் தொடர்ந்து கதை, எது வேண்டுமானாலும் என்னைச் செய்... ஆனால் கலியாணம்…
ஈழத்தை ஆட்கொண்டுள்ள பிரித்தாளும் தந்திரோபாயம்! தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!
1921ம் ஆண்டில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்தாளும் தந்திரோபாயம் இன்று வரை தமிழர்களை விடுவதாக இல்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழின தலைமைத்துவத்தினை உடைப்பதில், இன்று வரை பிரித்தாளும் தந்திரோபாயம் செயற்பட்டுக் கொண்டே வருகின்றது. அந்தவகையில் தமிழினத்தினை தாங்கும் மற்றும் தாங்கிய இரண்டு முக்கிய கட்சிகளில்…
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த…
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. இதன்படி முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கை இம்மாத…
அரசியல் கைதிகள் விவகாரம்: இவ்வாரம் இறுதி முடிவு! – ஜனாதிபதி,…
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின் போது கைதிகள் விடுதலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது…
யுத்தப் போர்வையில் குற்றம் இழைத்தோருக்குத் தண்டனை! உண்மையைக் கண்டறிவது அவசியம்!…
பயங்கரவாதத்திற்குள் மறைந்துகொண்டு கொலைகளைச் செய்த, ஆட்களைக் கடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். எனவே, உண்மையைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்பு செய்த படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். உண்மையைக் கண்டறிவது என்பது நாட்டைக்…
வடக்கைப் பிரபாகரனிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தார் ராஜபக்ச!
சிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ஆம் நாள் நடந்த, “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின்…
மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பரந்தனில் கோரிக்கைகள்
'மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக வடக்கு கிழக்கு பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' இலங்கையின் மலையகத்தில் மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மலையக மக்களுக்கான வீடுகள், காணி உரிமைகள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு மாகாணத்தின் பரந்தன் நகரில்…
பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் என்கிறார் கருணா
பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் எனவும், எனினும் அவருக்கு உலகமயமாக்கல் குறித்த அறிவு கிடையாது எனவும், கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் இடம்பெற்ற…
புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர்!- மாரப்பன – அரசியல்…
தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விரைவில்…


