மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் பாரிய போராட்டம்…

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படையினர் அபகரித்து வைத்திருக்கும் நிலங்களிலிருந்து படையினர் வெளியேறுவதும், அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களை மீள்குடியேற்றுவதும் படையினரின் முடிவிலேயே தங்கியிருப்பதாக பிரதமர் ரணில் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறையற்றிருந்தால் மஹிந்த…

யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – விசாரிக்க சிறப்பு குழு!

யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பலாத்காரங்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவை குறித்து விசாரணை செய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுயாதீன குழுவொன்றை நியமித்துள்ளது. ஏழு பேர் இந்தக் குழுவில் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் மே மாதம்…

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் நிலை பரிதாபகரமாம்!

காணமல் போன கணவன்மார்கள், பிள்ளைகள், சகோதரர்கள் தேடியும், தடுப்பில் உள்ளவர்களுக்கான சட்ட ஆலோசனை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவும் எமது வாழ்கை முழுவதும் சீரழிந்து போகின்றதென யாழ்.மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதே விதவைகள் தினத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள்…

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின்…

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில்…

புதிய அரசும் ஏமாற்றுகின்றது! சுரேஸ் குற்றச்சாட்டு!!

வடமாகாணசபை உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் வகையில் வவுனியா மாவட்டச்செயலர் நடந்து கொண்டமை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியிருக்கின்றபோதும், குறித்த மாவட்டச்செயலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தவறியிருக்கின்றார்கள். இந்நிலையில் கூட்டமைப்பின் கட்சி தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவிடயத்தில் கையாலாகாதவர்களாகவோ, நடவடிக்கை…

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய…

தமீழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானமாக இருக்கவும்!- ஜி.எல்.பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையை தொடர்பில் அரசாங்ம் அக்கறை காட்டுவதோடு இதனை குறித்து அதிக உணர்வு பூர்வமான விடயமாக பார்க்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு நேற்று செவ்வாயக்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…

வெளிநாட்டு தமிழர் கட்டமைப்பை சிதைப்பதில் முக்கிய அரச புலனாய்வாளர்

மைத்திரி- ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து நடாத்தும் காய் நகர்த்தலில் விழிப்படையாவிட்டால், இலங்கை அரசின் வெற்றி நிச்சயம் என அரசியல் ஆய்வாளர் ச.பா.நிர்மானுசன் குறிப்பிட்டார். மைத்திரி- ரணில் அரசாங்கம் தமிழ் மக்களை அரவணைப்பது போன்று நடித்து அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் வெளிவர இருக்கும்…

வடக்கில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும்

வடக்கில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும். இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவை வடமாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச மற்றும் அரசசார அமைப்புக்கள் முன்வரவேண்டும் என இலங்கை தமிழர் மேம்பாட்டு பேரவையின் தலைவர் தவராசா தர்ஸன் வேண்டு கோள் விடுத்துள்ளார். போதைப்பொருள்…

மதுவைக் கொடுத்து எமது தமிழ் மக்களை அழிக்கிறார்கள்: இதுதான் யுத்தத்தால்…

கடந்த அரசாங்கம் யுத்தத்தால் எமது தமிழ் மக்களை அழித்தது, தற்போது யுத்தம் ஓய்ந்து விட்டது மதுவைக் கொடுத்து அவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான மதுபானசாலைகளை திறக்க அனுமதித்தது. இதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்…

கூட்டமைப்பை சிதைக்க சதி!

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சதிக்கு தமிழ்க்…

இலங்கையின் நல்லிணக்க முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் உதவும்: ஃபுமியோ கிஷிடா

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவு வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய பிரதமர்…

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட தளங்களும் போராடுபவர்களும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி உள்ளன / உள்ளனர். ஆயுதங்களுக்குப் பதிலாக இராஜதந்திரமும் போராட்ட தளங்களாக சர்வதேசத்தளமும் தாயகமும் போராடுபவர்களாக புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் நயவஞ்சகமாக இனவழிப்பை…

மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டும்-…

மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளத்தில் வன்னியுர் கவிராயரின் சிலை திறப்பு விழாவில் நேற்று (20.6) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,, வன்னியூர்…

மீள்குடியேற்றம்: “அரசாங்கம் சொல்லும் அளவில் இடம் கிடைக்கவில்லை”

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம் வழங்கியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது   இலங்கையில் வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்காக அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வழங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களாகின்றன. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு…

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என…

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சதிக்கு தமிழ்க்…

பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது!…

எமது பிரதேசங்களில் போதைப்பாவனை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதனைத் தடுப்பதற்கு பாடசாலையின் அதிபர்கள் ஒத்துழைப்பதில்லை என யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும், உளசமூக உத்தியோகத்தரும் குற்றம் சுமத்தியிருப்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மாணவச் சமூகம் சீரழிவதற்கு பல்வேறு காரணிகள் பின்னணியில் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தீர்வு காண்பதனை…

தமிழர்களுக்கு நீதி தேடி அலையும் நீதி அரசர் விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கு…

அமெரிக்காவில் முன்னைய ஜனாதிபதிகளான நிச்சன்  மற்றும் றேகன்  ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை தெரிவு செய்யும் போது அவர்கள் தமது கொள்கைகளேயே கடைப்பிடிப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் சில நீதியரசர்கள்  டேவிட் சூட்டர், அந்தோணி கென்னடி மக்களின் பக்கம் நின்று மக்களுக்கு உகந்த நீதியை வழங்கினார்கள். அதே போன்றுதான்…

சர்வதேச அகதிகள் தினம் இன்று! நாடு திரும்பும் ஆர்வத்துடன் ஈழத்தமிழர்கள்

சர்வதேச அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது தாய்நாட்டுக்கு சென்று புதிய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை உள்நாட்டுப் போரை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நான்கு தவணைகளாக 3 லட்சத்து…

இலங்கை- இந்திய பேரூந்து-ரயில் போக்குவரத்து வரலாற்று ரீதியானது!- இந்திய நாளிதழ்

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான வீதிப் போக்குவரத்து தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன இந்திய பேரூந்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி, அண்மையி;ல் 2300 கோடி ரூபா செலவில் பாம்பன்- தலைமன்னார் கரைகளுக்கு இடையில் இந்த பாதை அமைக்கப்பட திட்டம் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும் இதனை இலங்கையின் பிரதி வெளியுறவு…

தமிழர்களின் எதிர்காலம் வடபுலத்து நீதிபதிகளிடம்…

பண்பாட்டின் விளைநிலம் என்றிருந்த யாழ்ப்பாணத்தின், வடபுலத்தின் சமகால நிலைமையை நினைக்கும் போது இதயம் கருகிப் போகிறது. இன்று எங்கள் மண்ணில் நடக்கின்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கக் கூடியவர்கள் வட புலத்தின் நீதிபதிகள் என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே தமிழ் மக்களிடம் உள்ளது.   அந்தளவிற்கு…

போதைப் பொருள் பிரச்சினையில் வடக்கின் நிலை மிகவும் சோகமானது: ஜனாதிபதி

நல்ல சமூகத்தை உருவாக்குவதில் பாரிய சவால் காணப்படும் நாட்டில் பாரதூரமான சமூக பிரச்சினையான போதைப் பொருள் பிரச்சினையில், இலங்கையின் வடக்கின் நிலைமை மிகவும் சோகமான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி ரிச்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே…

மீண்டும் யாழினில் ஆயுதம் தரித்த காவல்துறை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் காவல்துறை சைக்கிள் ரோந்து சேவை எனும் பெயரினில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் பகிரங்கமாக இன்று களம் இறக்கப்பட்டுள்ளனர். யுத்தம் ஓய்வுக்கு வந்திருந்த பின்னர் நிராயுதபாணியாகவே காவல்துறையினர் சேவையினில் ஈடுபடுத்தப்பட்டு வந்திருந்தனர்.அவர்கள் மீண்டும் தற்போதைய சூழலை காரணம் காட்டி ஆயுத…