சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும்…

இந்தப் பூமி பந்தின் அசைக்க முடியாத சக்தியாக, ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன் பலம் மிக்க அமைப்பாக தமிழர் சேனை 30 வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது?? இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத…

இனஅழிப்பு மற்றும் நீதி வேண்டிய வடமாகாண தீர்மானம் ஜ.நா பிரதிநிதியிடம்!

ஈழத்தில் நடந்தது இன அழிப்பே என்பதை வலியுறுத்தியும் சர்வதேச நீதிமன்றினில் குற்றவாளிகளை நிறுத்தக்கோரியும் வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் வடக்கு முதலமைச்சர் நேரடியாக கையளித்துள்ளார். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dcPPQkSCnkc அதே வேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால்…

மோடியுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேசப்படும்!- சுமந்திரன்

இந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்கு கிழக்;கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், பிரதமர் மோடி இலங்கை வரும் போது அவருடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள்…

ஐ.நா. அறிக்கையை வெளியிடுவது மீண்டும் ஒத்திவைக்கப்படாது: கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கை வெளியிடுவதை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்படப் போவதில்லை. ஏற்கனவே, குறிப்பிட்டவாறு செப்டெம்பரில் அந்த அறிக்கை நிச்சயமாக வெளியிடப்படும் என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்டமன் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக்…

சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனி இலங்கைக்குள் இடமில்லை என்கிறார் மங்கள

சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என, சீனாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் மைத்திரிபால சிறிசேன தனது முதல் வௌிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்மையில் இந்தியா சென்றார். அத்துடன் இம்மாதம் அவர்,…

தமிழ் இளைஞர்களை சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்!- பொன்.செல்வராசா…

இந்த அரசாங்கம் இந்த நாட்டில் இன்னும் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் இளைஞர்களை சுதந்திரமாக நடமாடச் செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கடந்த…

மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சுமார் முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தத்தை வெற்றி கொண்டதன் மூலம் தன்னை ஒரு கதாநாயகனாக உள்ளூரிலும் சர்வதேச நாடுகளிலும் வர்ணித்துக்காட்டி வந்துள்ள இவரின் தோல்வி இவருக்கே வியப்பாகவிருந்துள்ளது. பயங்கரவாதம் இடம்பெற்று…

போர்க்குற்ற அறிக்கை பிற்போடப்பட்டமை கவலையளிக்கிறது: த.தே.கூட்டமைப்பு

இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை கவலை அளிப்பதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மனுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அறிக்கை பிற்போடப்பட்ட போதிலும், அடுத்த…

இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு கட்சியை வளப்படுத்தி மக்கள்…

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை…

600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

1990ம் ஆண்டு ஜுன் மாதம் 600 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டப்பட்டமைக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கருணா தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெறும் போது தாம் வடக்கில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த கொலைகள் மூலம் விடுதலைப் புலிகளே…

யானைக் காட்டுக்கு நடுவே இந்திய வீட்டுத் திட்டம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் வெள்ளாங்குளம் கணேசபுரம் இந்தியன் வீட்டுத்திட்ட கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

கிழக்கில் காணி அதிகாரம் இல்லாத அமைச்சுகளை கூட்டமைப்பு கையேற்பது தேவையா?

காணி அதிகாரம் இல்லாத அமைச்சுக்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கையேற்பது தேவையா? யுத்தகாலத்தில் பல லட்சக்கணக்கான தமிழ்மக்களின் காணிகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது சுவீகரிக்கப்பட்டன. இழந்த காணிகளை மீட்பதற்காவது காணிஅதிகாரத்தை த.தே.கூட்டமைப்பு யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது. இவ்வாறு கிழக்குமாகாணசபையின் த.தே.கூட்டமைப்பின் மூத்தஉறுப்பினர் துரைரட்ணம் தமது மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் பேசுகையில்…

அழுகண்ணீர் விடுபவர் துயரம் தீர்வது எந்நாளோ?

தமிழ் அன்னையர் விடும் கண்ணீர் கணக்கின்றிப் போகிறது. காணாமல்போன தங்கள் பிள்ளைகளுக்காக,  குடும்பத் தலைவர்களுக்காக ஆண்டுக்கணக்கில் அழுவதென்பது சாதாரணமானதன்று கண்ணீரோடு உறங்கி கண்ணீரோடு விழிக்கின்ற பரிதாபத்துக்கு என்றுதான் முடிவு கிட்டும்? பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது எங்கள் அன்னையர் நிலத்தில் வீழ்ந்து நீளுமோ எங்கள்…

தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! – மீள்குடியேற்ற அமைச்சர்…

எவ்வித வசதிகளும் இன்றி தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், அங்கு மக்களுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில்…

இந்திய மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

சட்ட விரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க…

சர்வதேசம் எங்களை ஏமாற்றுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்: போராடுவோம்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட்டு தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்று யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. போராட்டம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரான அமிர்தலிங்கம் இராசகுமாரன் அவர்கள் தமிழ்…

இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா? கதிரவன்

இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும் விஞ்ஞான உலகம், எங்கள் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள வேண்டிய, தேவையும், அவர்களுக்கில்லை போலும்.…

போர்க்குற்ற அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமைக்கு காரணத்தை கூறும் ஐ.நா

நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக…

கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன! வருடாந்த…

கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் 160…

தற்கொலை செய்து கொண்டால்தான் யுத்த குற்றவாளிகள் தப்பலாம் – சம்பந்தன்

யுத்தக்குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் இருந்து அவர்களால் தப்ப முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ளமையானது, யுத்தக்குற்றவாளிகளைத் தப்பிக்க இடமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து…

குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எப்படி நீதி கிடைக்கும் –…

குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் போது எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள். ஜ.நா அறிக்கை தாமதப்படுத்தியமைக்கு கண்டனம தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு மனுவைப் பெற்றுக்கொண்ட பின் ஊடகவியலாளரிடம் கருத்துரைக்கும் போதே…

ஜ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி –…

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஆறு மாங்களுக்குப் பின்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். கட்டுநாயக்கவில் இடம்பெற்ற செயலமர்வில் பங்கெடுத்து உரையாற்றுப் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின்…

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்!- ஜே.வி.பி மாற்றுக்குழு

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் மாற்றுக் குழு அழைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல தெரிவித்துள்ளார்.…