போரின்போது விஸ்வமடு அருகே 30,000ற்கும் அதிகமான சடலங்கள்: மன்னார் ஆயர்…

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி…

இலங்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகள்…

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (பிப்ரவரி 23) தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற விவகாரத் துறை…

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய விசேட குழு…

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 182 தமிழ்க் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றில் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ­, இவர்களது குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழுவின் தீர்மானத்திற்கமைய குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகள் இன்னும் 3 வாரங்களுக்குள் விடுவிக்கப்படுவர் என்றும் உறுதியளித்தார். நாடாளுமன்றில்…

அனைத்துலகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால் தான்…

அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தை…

யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டமை சரியானதே – பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணை அறிக்கை சமர்பிக்க காலம் தாமதிக்கப்பட்டமையானது, சரியான முடிவே என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தாயினாவின் சிறிலங்காவுக்கான உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தமது வலைபதிவில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்கு சாட்சி மற்றும் தகவல்களை வழங்கியவர்களுக்கு இந்த தீர்மானம் கடினமானதாக இருக்கும். குறிப்பாக மனித…

உள்ளக விசாரணையே இடம்பெறும்! ஐ.நா., அமெரிக்கா, இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம் என்கிறது…

இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த விடயத்தில் உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளதுடன் இதற்கு அமெரிக்காவும் ஐ.நாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இலங்கை விடயத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிநாட்டவர்கள் அவசியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேசத்…

திருமலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்தது? சுரேஷ்…

திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தடுத்து வைக்கப்ப ட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.பதிவு இணைய செய்தி குறித்த…

13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா…

இந்திய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தவில்லை என  ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இலங்கை அகதிகள் பற்றி பேச்சு இல்லை!

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அணுசக்தியில் ஒத்துழைப்பு முதல், கால்நடைகளைத் தாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பற்றியோ இலங்கை அகதிகள் பற்றியோ பேச்சே இல்லை.…

இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!- ஷோபா சக்தி

கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில்…

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் சிறந்தவை: அமெரிக்கா

இலங்கையின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆரம்ப முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 30 வருடங்களுக்கு பின்னர் மனித உரிமைகள் காப்பு மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே பேரவையில்…

ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ஏமாற்றம்! வாய்மூல அறிக்கையினை மார்ச்சில்…

சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா…

பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு முட்டுக்கட்டையா? – பிரித்தானிய தமிழர் பேரவை…

இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்…

பூனையாக பதுங்கிய வடமாகாண சபை புலியாக மாறிவிட்டது: ஞானசார தேரர்

இனவாத பிரிவினைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட…

ஐ.நா அறிக்கை ஒரு முறை மட்டுமே ஒத்திவைக்கிறதாம் – ஐ.நா…

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அளித்த…

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6…

இலங்கையில் உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்: பிரித்தானியா

இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கு போரின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொணர்வது முக்கிய விடயமாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செப்டம்பருக்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இதனை…

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது: கிருஸ்ணபிள்ளை…

2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும், தற்போதைய பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்படுத்தியதும் தமிழர்களே. ஆனால் இன்று அவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றோர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமைல) தெரிவித்தார்.…

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு…

பிரணாப் முகர்ஜி, சுஷ்மா ஆகியோரையும் இன்று சந்திக்கவுள்ளார் மைத்திரி!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட குழுவினர் நேற்று இந்தியா சென்றடைந்தனர். இதற்கமைய டில்லியில் உள்ள இந்திரா காந்தி…

இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குவது உண்மையை மறுதலிக்க செய்துவிடும்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் விசாரணை அறிக்கையை வெளியிடமாமல் தாமதப்படுத்தி இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலஅவகாசத்தை வழங்குவது நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல்ஹுசைனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளது.…

ஐ.நா விசாரணை அறிக்கை விவகாரம்! கைவிரித்தார் பான் கீ மூன்!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கைவிரித்து விட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையைப்…

மூடி மறைக்கப்படும் தமிழினப் படுகொலை! நீதிகேட்டு அணிதிரள்வோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை

அறுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசின் கொடிய இனப்படுகொலைக்கு முகம்கொடுத்து, அதற்கெதிராக பல ஒப்பற்ற உயிர்த் தியாகங்கiளை விலையாகக் கொடுத்து போராடிவரும் அடக்கப்பட்ட மக்களாகிய நாம் இன்று அரசியல் ரீதியாக என்றுமில்லாதவாறு ஓர் அனர்த்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். கடந்து சென்ற சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது…