பாலியல் வன்முறை: யாழ் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் காரைநகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது உட்பட யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் கொலைகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற…

157 தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது மண்ணுக்கு கொண்டுசெல்ல ஆஸி. முடிவு

படகில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு…

இந்தியாவின் இரட்டைவேடம் – இஸ்ரேலுக்கு ஒன்று சிறீலங்காவிற்கு ஒன்று!

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி…

காணிகளை கொள்ளையிடுவோர் பயங்கரவாதிகளே!– மாவை சேனாதிராஜா

எவரேனும் காணிகளை கொள்ளையிடுகின்றனர் என்றால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணிகளை சுவீகரிப்பதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காணப்பிரச்சினை காரணமாக…

வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

முற்றாகஅழிந்துள்ள ஒரு ஆலயம்   இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள…

சர்வதேசத் தலையீடு இலங்கை விவகாரத்தில் இருக்கக்கூடாது! என்கிறார் சேஷாத்ரி சாரி

இலங்கையில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அதனால்தான் ஜெனிவாவில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. எதிர்காலத்திலும் இந்தியா இவ்வாறே செயற்படும் என்று இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி சேஷாத்ரி சாரி தெரிவித்தார். இலங்கை பிரச்சினை…

தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இல்லை: ஜே.வி.பி…

இந்தியா தலையிட்டு வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் என அந்த மக்கள் எண்ணுவார்களாயின் அது மிகப்பெரிய ஏமாற்றம் என்பதுடன் அழிவும் கூட என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மனித வளத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.…

யாழ் குடாவில் நிலங்களை கையகப்படுத்த இராணுவம் முயலுகிறதா?

யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அதனை காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம்களுக்காகப் புதிதாக காணிகள் சுவீகரிக்கப்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கொழும்பில் செய்தியாளர்களிடம்…

போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க மறுப்பதா? ராமதாஸ் கண்டனம்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக சிறீலங்கா…

பிரிவினையினை தூண்டாத வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் தடையாக…

நாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்கின்றதெனில் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம்…

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த சுப்பிரமணின் சுவாமி, சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இலங்கையில்…

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி காணிகள் சுவீகரிக்கப்படாது என ராஜபக்ச சொல்ல…

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தெளிவாகச் சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை அச்சுவேலி, இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில்…

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?:…

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் பாரியளவில் அமைதி நிலவினால் ஏன் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.…

ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில்…

ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், மலேசிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்களின் ஆள் அடையாள விபரங்களை இலங்கை அரசாங்கம் மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பதுங்கு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து குறித்த புலி…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது. இதன்படி, நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நாடுகளிலேயே இந்த அமர்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தமது விசாரணை அமர்வை இலங்கையில் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்…

இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளன! வடக்கின் ஆளுனராக சிவிலியன் ஒருவரை நியமிக்கவும்!–…

நாட்டில் இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கின் ஆளுனராக இரண்டாவது தடவையாகவும் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் லயனல் பெர்னாண்டோ என்ற சிங்கள ஆளுனர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டலாம் என்ற கருத்து நிலவியது. அவ்வாறான ஓர் சிவிலியன் ஒருவரை ஆளுனராக…

ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது!

இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள  இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவை சந்திப்பதற்கு விடுத்த அழைப்பை, இலங்கை நிராகரித்துள்ளது.. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, சன்ட்ரா பெய்டாஸூக்கும் ஜெனிவாவில்…

த.தே.கூட்டமைப்பைத் தடை செய்ய, அது மண் குதிரை அல்ல: அரியநேத்திரன்…

தமிழர்களின் பலமிக்க கட்சியான த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது சர்வ சாதாரணமான விடயம் அல்ல என்பதனை ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அண்மையில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து த.தே.கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும்…

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழு, போர்க்குற்ற விசாரணைக் குழுவாக…

இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் விசாரணையை நடத்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. இதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக சர்வதேச நிபுணர்கள் மூவரை, இலங்கை அரசாங்கம் நியமிக்க வேண்டியேற்பட்டது என்று…

போர்க்குற்றம் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்கிறேன்: சர்வதேச நிபுணர்- ஆணைக்குழுவின்…

இலங்கை ஜனாதிபதியால் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச ஆலோசனை நிலை நிபுணர்களின் தலைவர் நியாயமான விசாரணையை முன்னெடுக்கவே தாம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச ஆலோசனை குழு ஒன்றை ஜனாதிபதி கடந்த வாரத்தில் நியமித்தார்.…

மகிந்தர் மோடியை எப்படி வலைக்குள் விழுத்தினார் : ரகசிய தகவல்…

மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்திவிட்டார் என்று, கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இனி இந்தியா குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை, என்று மகிந்தரின் பரிவாரங்கள் இந்த அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது கூறிவருகிறார்கள். இதன் பின்னணி என்ன ?…

தமிழின அழிப்பில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம்கள் பாவத்தின் சுமையை…

அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அதில்  மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித…

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஆருப் ராஹா இன்று மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தாம் இலங்கையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புக்கள் பயன் தருபவையாக இருந்தன…