153 அகதிகள் வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் இடம்பெறுகிறது- அகதிகள்…

இலங்கை அகதிகள் 153 பேரின் வழக்கு விசாரணை இன்று அவுஸ்திரேலியா, மெல்பேர்ணில் இடம்பெறவுள்ளது இதன்போது இந்து சமுத்திர பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 இலங்கையர்கள் தொடர்பில் வாதவிவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த அகதிகள் ஜன்னல்கள் அற்ற, காற்றுப் புகாத கப்பல் அறைகளில்…

தமிழ் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்

தேசியப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தின் உயர்­மட்டம் தீர்­மா­னித்­துள்­ள­தாக நம்­ப­க­ர­மாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அர­சியல் தீர்­வுக்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெற முடி­யாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­வட்­ட­மாகக் கூறி­வ­ரு­கின்ற நிலையில், அர­சாங்கம் இவ்­வா­றான தீர்­மா­னத்­துக்கு…

குறுகிய நோக்கத்தை கைவிட்டால் பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம்: இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர்

குறுகிய மனப்பான்மையை விட்டு செயற்படும் போது 13வது அரசியல் அமைப்பு, தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பவற்றை தீர்த்துக் கொள்ள முடியும் என்று இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன இந்திய நாளிதழ் ஒன்றுக்கு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். வரலாறுகளை பகிர்ந்து கொள்ளல்,…

கோத்தபாய- இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு: இராணுவ உறவு…

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அருப் ராஹா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், நேற்றுக் காலையில், இலங்கை விமானப் படைத் தலைமையகத்துக்கு சென்றிருந்தார். விமானப் படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக…

ஐ.நா.விசாரணைக்குழு முன் புலம்பெயர் தமிழர்கள் சாட்சியமளிக்க வேண்டும்!- தமிழ் கூட்டமைப்பு…

கடந்த 15ம் திகதி முதல் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா.விசாரணைக்குழு முன்  புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சென்று சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள்  விடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற…

சீனாவின் பாதுகாப்புப் பணிக்காக 1200 ஏக்கர் காணி வழங்கியது சிறீலங்கா!

திருகோணமலை மாவட்டத்தில் நகர்ப்பகுதி உள்ளிட்ட 1200 ஏக்கர் காணிப்பரப்பு சீனாவின் பாதுகாப்பு சம்பந்தமான அபிவிருத்திப் பணிகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனா சென்றிருந்த போது, இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள ஒருமுக்கிய பகுதியும் சீனாவுக்கு…

153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!-…

அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இந்த கப்பலின் அறைகளில் காற்றுப்புகக்கூட ஜன்னல் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், எங்கே கொண்டு…

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை போப் சந்திக்கக் கூடும்

போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இலங்கை செல்கிறார் அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒரு கோரிக்கை வடகிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் போப்பிடம் வைக்கப்பட்டுள்ளதை, பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்,…

போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பித்தது ஐ.நா விசாரணைக் குழு

இலங்கையில் யுத்த காலத்தில் நடைபெற்ற யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இவ்விசாரணைக் குழு 10 மாதங்கள் விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம்…

இலங்கை விவகாரம்! சர்வதேசத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது!– ஆங்கில இதழ்

தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயம் தொடர்பிலும், அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் தொடர்பிலும் சர்வதேசத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக இந்தியாவின் ஜி பார்த்தசாரதி, ரமேஸ் பண்டாரி, நோர்வேயின் எரிக்…

ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு! உச்சநீதிமன்றில்…

பிளவடையாத ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் சார்பில் உச்ச நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன்  இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்…

சனல் 4 தொலைக்காட்சி காட்டியதையுமா மறந்துவிட்டீர்கள் ? நரேந்திர மோடிக்கு…

மிகவும் கவலை அளிப்பதும், முக்கியமானதுமான ஈழத்தமிழர் பிரச்சினையில், தற்போது ஏற்பட்டு வரும் நிலைமையை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிÞ அவர்கள், மூன்று நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்து, நமது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களோடு, மிகவும் விரிவாக, இருநாடுகளுக்கு…

தென்னாபிரிக்காவின் தலையீடு வேண்டாம்! தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசலாம்!- விமல்…

தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, அது ஒரு கலந்துரையாடலே என்று இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிந்திய செவ்வி ஒன்றில் சிறில் ரமபோஸா வடக்கி;ன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தமையானது, இனப்பிரச்சினை தொடர்பான…

ஆட்கடத்தல்: ஆதாரம் இருந்தால் தமிழ் அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் ஐந்து அமர்வுகளில் விசாரணைகளை நடத்தியுள்ள காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), முன்னாள்கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக ஆட்கடத்தல் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் அது குறித்து…

வடக்கு,கிழக்­குக்கு மட்டும் ஏன் இரா­ணுவ ஆளு­நர்கள்?

தமிழர் தாயகப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு மட்டும் இரா­ணுவ ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதேன் எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரங்­களை நன்­க­றிந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மாகா­ணத்­திற்கு ஆளு­ந­ராக மீண்டும் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான ஜி.ஏ.சந்­தி­ர­சிறி நிய­மிக்­கப்­பட்­ட­மையை அடுத்து தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தனது கடு­மை­யான…

இலங்கையைக் காப்பாற்ற அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முயற்சி

மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றி அதன் அடிப்படையில் நவநீதம்பிள்ளையால் 10 மாத வரையறையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் டோனி அபோட்டின் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை…

‘ஆளுநர் சந்திரசிறி நியமனம் ஜனாதிபதிக்கே இழுக்கு’: விக்னேஸ்வரன்

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரி ஜீ.ஏ. சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். வடக்கு மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி முன்னிலையில் தாம் பதவிப்பிரமாணம்…

இனப்பிரச்சினைக்கான தீர்வில் மோடி அரசு களம் இறங்க வேண்டும்

யார் வந்தாலும் அவர்களுக்கு மாலை மரியாதை கொடுத்து வந்தவரைக் குளிரப் பண்ணி அவரின் கடமையை திசைதிருப்பும் யுக்திகளுக்கு இலங்கையில் குறைவேயில்லை. இதன் காரணமாக இலங்கைக்கு தூது வருகின்றவர்களின் நோக்கம் சிதைவடைந்து போகின்றது. உண்மையில் தூது வருவோர் அரசிடமிருந்து எந்த உபசரணையையும் வரவேற்பையும் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பது பொது நியதி.…

இலங்கை உள்ளூர் தீர்வு ஒன்றை நோக்கியே முயற்சிக்கிறது!- ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் பங்களிப்புடன் உள்ளுரில் தீர்வு ஒன்றுக்கே இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைசசர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கருத்தை இன்று கண்டியில் வைத்து வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை தெளிவுப்படுத்துவதற்காக அமைச்சர் கடந்த வாரத்தில் இந்தியா சென்றிருந்தார். இதன் போது அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்…

‘அமிர்தலிங்கம் கொலையை கண்டித்திருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்’: சம்பந்தர்

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்…

கைதான விடுதலைப்புலிச் சந்தேகநபர்களை அழைத்து வர இலங்கை பொலிஸார் மலேசியா…

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கையின் 4 விசேட பொலிஸ் அதிகாரிகள் மலேசியா செல்லவுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்களை இலங்கையிடம் கையளிக்க மலேசிய அதிகாரிகள் இணங்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட மலேசிய அதிகாரிகள் இலங்கைக்கு…

புலிகளின் சிரேஷ்ட தலைவர் ரமேஸின் மனைவிக்கு தென்னாபிரிக்காவில் புகலிடம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸின் மனைவிக்கு தென்னாபிரிக்கா புகலிடம் வழங்கியுள்ளது. வத்சலாதேவி என்பவருக்கு இவ்வாறு தென்னாபிரிக்க அரசாங்கம் அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது. வத்சலாதேவி, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்கா தமிழீழ விடுதலைப்…

வடக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு: ‘சர்வதேசத்திடம் முறையிடுவோம்’- ததேகூ

வடக்கு மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, இராணுவத் தொடர்பில்லாத சிவில் அதிகாரி ஒருவரை வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த…