ஈழ தமிழருக்காக போராடியவரும் தமிழக காவல்துறையினரால் சுட்டுக்கொலை!

முத்து நகரமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் தமிழரசனும் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது. தமிழீழத்தில் 2008,…

தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு.. சீமான்…

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 10 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது சர்வாதிகார அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம்…

100 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தை கொலை செய்து தீவிரப்படுத்தியிருக்கிறது…

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் போராடிய மக்களை, துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறது. ஆனால், இனிமேல் தான் இந்தப் போராட்டம் திவீரமடையும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வந்த போராட்டத்தின்…

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5 பேர்.. ஐவர் படுகாயம்..…

தூத்துக்குடி: போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கிளர்ச்சி- 100- நாட்களாக நீடிப்பு-நாளை முற்றுகைப் போராட்டம்-144…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நாளை தூத்துக்குடியில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடியில் இன்று இரவு 10 மணி முதல் மே 23-ந் தேதி வரை 144 தடை…

கர்நாடகா வந்து அணைகளின் நீர்த்தேக்க அளவைக் கண்டுவிட்டு, ரஜினி தண்ணீரைத்…

“காவிரிப் நதி நீர் பிரச்னையில் அணைகளின் நீர்த் தேக்க நிலையை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும், வேண்டும் என்றால் கர்நாடகா வந்து அவரே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடட்டும்” என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில்…

வஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி

காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி அழித்ததற்கான வீடியோ பதிவையும் இந்திய இராணுவம் அண்மையில் வெளியிட்டது. இந்த பதிலடியால் திணறிய பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை முகாமை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு…

அருணாசல் எல்லையில் 4 லட்சம் கோடி மதிப்பில் சீனா தங்கச்சுரங்கம்,…

பெய்ஜிங், இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு…

கர்நாடகாவிற்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக!

பெங்களூர்: கர்நாடகாவில் வெற்றிபெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால்…

365வது நாள் கதிராமங்கலம் போராட்டம்; அரசியல் தலைவர்கள் கண்டன உரைவீச்சு!

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 365வது நாள் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பங்கெடுத்துக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு மே19ம் தேதி ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு எதிராகவும், அதன் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,…

“நான் ஏன் நிர்வாண மாடலானேன்?” – ஒரு தமிழ் பெண்ணின்…

(மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணிமுதலியார் என்ற பெண்மணியின் கதை. அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது கதையை அவரே விளக்குகிறார்.) எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன்.…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது…

வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்துள்ளது. காவிரி: மத்திய…

29 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை மறைக்கும் மோடி!

மோடியின் பொய்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. உண்மையை மறைக்கும் அவருடைய பொய்களில் கர்நாடகா தேர்தல் முடிவுக்கு அவர் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு புதுவிதமானது. கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பதைப் போலவும், அது நிகரில்லாத வெற்றி என்றும் தனிப்பெருங்கட்சியாக வளர்ச்சியடைய வாக்காளர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி…

மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவுத்திட்டத்தை ஏற்றது…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நீர்வளம் மற்றும் நீர் மேலாண்மையில் செயல்திறன் கொண்ட என்ஜினீயர் தலைமையில் 10…

கர்நாடகா: விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் எடியூரப்பாவின் முதல்…

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு, முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறினார். கர்நாடக மக்களுக்கு…

விளைநிலத்தை தொட்டா வெட்டி புதைத்து விடுவேன் -சீமான் ஆவேசம்

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி சாலை திட்டமான பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து சீமானின் கண்டனவுரை. நாம் கேட்டது காவிரியில் தண்ணீர். ஆனால் இவர்கள் தருவது ஏர்போர்ட். சேலத்தில் இவ்வளவு நாட்கள் நாம் விமானத்தில்தான் வந்து கொண்டிருந்தோமா? ஏற்கனவே 160 ஏக்கரில் விமான நிலையம் இருக்கிறது.…

கடலூரில் தண்ணீர் பஞ்சத்தால் கழிவு நீரில் விவசாயம் செய்யும் அவலம்!-…

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மின்விசை பம்புகள், கை பம்புகள் என்று அனைத்தும் இருந்தும் பலவித காரணங்களால் செயல்படாமல் உள்ளன. பழுதடைந்த மின் மோட்டார்களை…

கர்நாடகா : ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு

பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் கடிதம் கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்நாடக ஆளுநர். பதவியேற்கும் தேதி, நேரம்,…

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் வருடத்திற்கு இரண்டு லட்ச குழந்தைகள் இறக்கின்றனர்!!!

இந்த நவீன  உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ந்துவருகின்றனர். ஆனால் இன்றளவும் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெண் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருப்பதால் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆண்டுதோறும் இரண்டு லட்ச பெண்குழந்தைகள் இறக்கின்றனர் என்பது தற்போதைய ஆய்வில் உறுதியாகி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்திதா சைக்கியியா இந்த ஆய்வை மேற்கொண்டார்.…

ரஷ்யா: சர்வதேச கால்பந்து போட்டியில் தமிழக தெருவோர குழந்தைகள்

''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது கால்பந்து'' மே மாதம்…

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர்…

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள்…

பெரும்பான்மை இல்லை… கோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா…

பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் விறுவிறுவென மகிழ்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களை கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை…

நாகை கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..…

நாகை: நாகையில் விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அரசு மே 14ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாய சங்கங்களின்…