மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 அதிகரிப்பு!
மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பல்கலைகழத்தின் கட்டிடத்தை தாக்கியதாகவும், துப்பாக்கி ஏந்திய நபர் சுடும் சப்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச்…
வறுமையால் தந்தை தற்கொலை… மக்களுக்காக பிணைக் கைதி… எஸ்.ஆர். நாதனின்…
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் அந்த தேசத்தின் 2-வது தந்தை எனவும் போற்றப்படும் மறைந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் இளமையில் வறுமையாலும் பின்னாளில் அரசுப் பொறுப்பில் இருந்த காலத்தில் மக்களுக்காக தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாகவும் இருந்த வரலாறு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலை நகர் கவிண்டது- பாரிய தாக்குதலை தொடுத்துள்ள…
ஈராக்கில் உள்ள மோசூல் என்னும் நகரே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டை. அதுவே அவர்களின் அசைக்க முடியாத தலை நகரமாக இவ்வளவு காலமாக இருந்து வந்தது. ஆனால் ஈராக் படைகளோடு இணைந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் , மோசூல் நகர் மீது பாரிய தாக்குதலை தொடுத்துள்ளது. இதனூடாக ஊடறுத்து, அவர்கள் முன்னேறி…
பணக்கார நாடுகளில் அமெரிக்காவுக்கு முதல் இடம்! இந்தியா 7வது இடத்தில்
உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதல் இடம்பிடித்துள்ள நிலையில், இந்தியா 7வது இடத்தில் உள்ளது. உலகின் பணக்கார நாடுகள் தொடர்பில் ‘நியூ வேல்டு வெல்த்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகளின்படி உலகின் பணக்கார நாடுகளின்…
கடலில் மீனவனுக்கு கிடைத்த ரூ.1,455 கோடி (RM 40.28 கோடி)…
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல்…
துருக்கி திருமண நிகழ்ச்சி வெடிகுண்டு தாக்குதல்: சிறுவர்களை பலிவாங்கிய ஐ.எஸ்
துருக்கியில் திருமண நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெரும்பாலும் சிறுவர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றின்போது 14 வயது சிறுவனை வைத்து ஐ.எஸ் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் துருக்கி நாட்டையே உலுக்கியுள்ளது. குர்துகளின் திருமண நிகழ்ச்சி ஒன்று…
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் காலமானார்!
தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார். சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது. ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்னர்…
கைதிகளை காதலியுடன் சேர்த்து வைத்த வினோத சிறைச்சாலை!
கொலம்பியாவில் 17 கைதிகளுக்கு சிறையிலே திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலீல் உள்ள Carcel villa Hermosa சிறையிலே குறித்த வெகுஜன திருமண விழா நடைப்பெற்றுள்ளது. சிறை அதிகாரிகள் அனுமதியுடன் கைதிகள் நீண்ட காலமாக விரும்பி வந்த பெண்ணுடனே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.…
துருக்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு 12 வயது சிறுவனை பயன்படுத்திய ஐ.எஸ்
துருக்கியில் திருமணவிழாவின் போது நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதனால் 30…
கல்யாண வீடு துக்க வீடானது.. துருக்கியில் குண்டு வெடித்து 30…
அங்காரா: துருக்கியில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியின் காஜியாண்டப் நகர் போர் நடைபெற்று வரும் சிரிய நாட்டில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் திருமண நிகழ்வு ஒன்று நேற்று…
“தீவிரவாதிகளை மன்னித்து விடுங்கள்”: தாயாரிடம் இறக்கும் நேரத்தில் உருக்கமாக பேசிய…
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்ட 12 வயது மகள் இறக்கும் நேரத்தில் தனது தாயாரிடம் ‘அவர்களை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக பேசியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக், சிரியா உள்ளிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு கடுமையான வரிகளை…
ஐ.எஸ்- நிலை குலைந்தது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
சிரியாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் சகிதம் தப்பி ஓடி வருகிறார்கள். அமெரிக்க வேவு விமானங்கள் இதனை கண்காணித்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்த முடியாது. காரணம் என்னவென்றால் இவர்கள் தப்பி ஓடும் வேளைகளில் கூட்டம் கூட்டமாக மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திச் செல்கிறார்கள்.…
பெண்களை கவர ஐ.எஸ் புதிய திட்டம்!
ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முதன் முறையாக பெண் செய்தித் தொடர்பாளரை பயன்படுத்தி பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும், பெண்களுக்கென மெஜஸ்டிக் என்னும் இதழை ஆரம்பித்துள்ளனர். இந்த இதழ் இணையதளத்தில் பின்பற்றுபவர்களுக்கும், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. இயக்கத்தில் புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்க பெண்களை கவரும் வகையில்…
ஆஸியின் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் – அகதிகளுக்கு நாட்டில் இடமில்லை!…
அவுஸ்திரேலியாவில் அகதிகளை தடுத்து வைக்கும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் எனவும், குறித்த தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் யாருக்கும் நாட்டுக்குள் இடமில்லை எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்கவைக்கும் முகாமில்…
அகதிகள் இல்லம் துவங்கும் முடிவு: வலுக்கும் எதிர்ப்பால் கைவிட்ட அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர். யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60 பேர் தங்கும் வகையில் அகதிகளுக்கான இல்லமாக மாற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால்…
38,000 குற்றவாளிகளை விடுவிக்கும் அரசு: காரணம் என்ன?
துருக்கி அரசு தங்கள் நாட்டிலுள்ள 38,000 குற்றவாளிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்க முடிவு செய்துள்ளது. துருக்கியில் கடந்த மாதம் இராணுவ புரட்சி ஏற்பட்டது, எனினும் அரசுக்கு ஆதரவானவர்கள் புரட்சியை முறியடித்ததுடன் நாட்டை மீட்டனர். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2000க்கும் மேற்பட்ட நபர்கள்…
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஐ.எஸ் அமைப்பின் புதிய மரண தண்டனை
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார்…
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்கா தான்! பரபரப்பு தகவல்
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா இந்தக் கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக்…
”பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இணையம்”: எச்சரிக்கும் உளவியல் வல்லுநர்
அதிகளவிலான இணையவழி பாலியல் படங்களை பார்ப்பதால் இளம் ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு…
போகோ ஹராம் வீடியோ காட்சிகள்: தேடப்படும் நபராக நைஜீரிய பத்திரிக்கையாளர்
போக்கோ ஹராம் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக, நைஜீரிய ராணுவ அதிகாரிகளால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நைஜீரிய பத்திரிக்கையாளர் போக்கோ ஹராம் அமைப்பிற்கு தான் ஆதரவு அளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகள் துபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளார் அகமத் சல்கிடா, ராணுவத்தினரின் விசாரணைக்காக தான் நைஜீரியா செல்ல…
ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து விடுதலை!
சிரியாவில் உள்ள Manbij நகரை கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆட்டத்தை சிரியா ஜனநாயகப்படையினர் அடக்கியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகர் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம்…
“உங்கள் குழந்தைகள் எங்கள் கையில்” அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட தீவிரவாதிகள்
போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிச்சிறுமிகளின் வீடியோவை 3வது முறையாக அத்தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் மூலம் உலக நாடுகளை…


