இபோலா: “வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும்”

மேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் சக்திமிக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இபோலாவைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் முன்னின்று செயலாற்றுகின்ற இந்த அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள சூழ்நிலையால் திணறிவருவதாகக் கூறுகிறது.…

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும்…

தீவிரவாதிகளை ஒழிக்க களமிறங்கும் 40 நாடுகள்

கொடூர அமைப்பாக வளர்ந்து வரும் ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முயன்று வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன்முதற்கட்டமாக அமெரிக்க ராஜங்க செயலாளர் ஜோன் கெரி, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்று பயணம்…

வெட்டிய தலையுடன் புகைப்படம்: பெண் தீவிரவாதியின் வெறிச்செயல்

ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பெண் தீவிரவாதி ஒருவர் நபர் ஒருவரின் வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ள பிரித்தானிய பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எச்சரிக்கும்…

ஸ்காட்லாந்து வாக்களிப்பு : ஒரு மாற்ற முடியாத முடிவு

வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான வாக்களிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஸ்காட்லாந்துக்காக ஒரேயொரு தடவை எடுக்கப்படக் கூடிய ஒரு முடிவு என்று இரு தரப்பு தலைவர்களும் கூறியுள்ளனர். இந்த வாக்கெடுப்பில் தமது தரப்பு தோல்வியுற்றால், தான் மற்றுமொரு கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கப்போவதில்லை என்று, ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கு ஆதரவான,…

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பிரிட்டன் வேட்டையாடும்: கெமரன்

பிரிட்டிஷ் பிரதமர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை அரக்கர்கள் என்று குறிப்பிட்டார்.   பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட குழுவான கோப்ரா…

பிரித்தானிய பிணையக் கைதியின் தலை துண்டிப்பு! ஐ.எஸ்.ஐ.எஸ் வெறியாட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரஜையான டேவிட் ஹெய்ன்ஸின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய ராஜ்ஜியம் என பிரகடனப்படுத்தி ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க…

தீவிரவாதிகளை கொன்று குவித்த இராணுவம்

நைஜீரியாவில் தனி இஸ்லாமிய நாடு உருவாக்க வலியுறுத்தி அந்நாட்டு இராணுவத்துக்கு எதிராக போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். மேலும் அப்பாவி பொதுமக்களை கடத்தி கொன்று குவித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் போகோஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கொண்டுகா நகரில் நேற்று முன்தினம் நைஜீரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.…

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் 30,000 பேர்? பகீர் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் 30,000 பேர் இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சி.ஐ.ஏ (CIA) செய்தி தொடர்பாளர் டீன் பாயிட் (Dean Boyd) கூறியதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தமே 10,000 பேர் தான் இருப்பார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்த…

ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்

உக்ரைனுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்துவரும் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் பெரிய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், பாதுகாப்பு உபகரண நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் தடைகளை…

அணு ஆயுதங்களை மேம்படுத்த ரஷியா முடிவு

தனது அணு ஆயுதங்களையும் விமானப் படைத் திறனையும் மேம்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் தோழமை நாடுகளுக்கு ஆதரவாக உடனடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அறிவித்ததையடுத்து ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷியாவின் முடிவை துணைப் பிரதமர் திமித்ரி ரோகோஸின் வெளியிட்டார். அந்நாட்டின்…

பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தள்ளுபடி

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான அனைத்துவகையான கொலைக்குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அதேசமயம் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பது நாளை வெள்ளிக்கிழமை தெரியலாம். கடந்த…

ரஷிய ஆதரவுப் பகுதிகளுக்கு கூடுதல் சுய அதிகாரம்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள டிபால்ட்சேவே நகரில், தூரத்தில் ஒலித்த துப்பாக்கி வெடிச் சப்தத்தை கேட்டு, எச்சரிக்கையாய் குனியும் உக்ரைன் வீரர். நாள்: செவ்வாய்க்கிழமை. உக்ரைனில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்கு கூடுதல் சுய அதிகாரம் வழங்க அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ உறுதியளித்துள்ளார்.…

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவோம் : ஒபாமா…

உலகின் எந்த மூலையில் பயங்கவாதம் தலை தூக்கினாலும், பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அதனை அமெரிக்கா ஒடுக்கும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், பயங்கரவாதிகள் அச்சுத்தல் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுத்து…

ஆப்கன் அதிபர் பதவி வேட்பாளர்கள் மோதலைக் கைவிட வேண்டும்

ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இரு முன்னணி வேட்பாளர்களும் மோதலில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் காபூலில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த அதிபர் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவின்…

இராக்குக்கு ஆயுதங்களை வழங்குகிறது பிரிட்டன்

இராக் இராணுவத்தினர் இராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை அளிப்பது குறித்த தகவல்களை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் செயல்படும் சுன்னி தீவிரவாதக் குழுவை எதிர்கொள்வதற்காக இராக்கிய இராணுவத்துக்கு 25 லட்சம் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. கனரக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்கள் வழங்கப்பட…

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள நிவாரண உதவிகளைச் செய்ய முன்வந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார். கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமானோர் பலியானார்கள். பலரைக் காணவில்லை.…

ஐ.எஸ்.ஸை ஒடுக்க செயல்திட்டம்: நாளை வெளியிடுகிறார் ஒபாமா

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை புதன்கிழமை  (செப். 10) வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஐ.எஸ். பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம் தயாராக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிடுவேன். இராக் போரைப்…

ஐ.எஸ். பயங்கரவாத எதிர்ப்பில் அமெரிக்காவுக்கு முனைப்பு போதாது: ஈரான் குற்றச்சாட்டு

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவுக்குப் போதிய முனைப்பு இல்லை என்று ஈரான் குறை கூறியது. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து…

இரண்டாவது குழந்தை பெற 20 ஆயிரம் பேருக்கு அனுமதி

பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடான சீனாவில், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 'ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரிசு' கொள்கை பின்பற்றப்படுகிறது. இதனால், அந்நாட்டின் மக்கள் தொகை சற்றே குறைந்துள்ள போதிலும், பல இடங்களில், இளைஞர்களே இல்லை; பெரியவர்கள் தான் இருக்கின்றனர். இளைஞர்களில் பெண்கள் எண்ணிக்கை கணிசமாக…

பாகிஸ்தானில் ஷியா பிரிவு தலைவர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் ஷியா பிரிவு தலைவர் அல்லமா அலி அக்பர் குமெய்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே தீராத நெடும்பகை இருந்து வருகிறது. ஷியா பிரிவினர் சிறுபான்மையாக வசிக்கும் இடங்களில் சன்னி பிரிவினரின் கை ஓங்குவதும், சன்னிபிரிவினர் சிறுபான்மையாக…

லெபனான் வீரர் தலை துண்டித்து படுகொலை! ஐ.எஸ்.ஐ.எஸ்ன் அட்டூழியம்

லெபனான் வீரர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுமட்டுமின்றி செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே,…

போர்நிறுத்தம்: கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் ஒப்பந்தம்

உக்ரைனில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக, அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, உக்ரைனில் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக நிகழ்ந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில்…