பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐ.நா தீர்மானம் அமுலாகுவதற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்:…
ஜெனிவா தீர்மானம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்குள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், உயிருடன் இருக்கமாட்டார்கள் என யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் வலியுறுத்தியுள்ளார். நேற்று யாழ்.வந்த சர்வதேச பெண்கள் விடயங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்ரின் றசலிடமே ஆயர் இதனை வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள்ஆணையகத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வருவதற்கே…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம்…
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன பிணை மனுவை நிராகரித்துள்ளார். பயங்கரவாத குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த கைதிகள் தொடர்பில்…
அரசாங்கம் தான் நினைத்ததை திணித்து இது தான் நல்லிணக்கம் என்று…
மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களிடம் திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின்…
அரசியல் கைதிகளின் விடுதலை ஐந்தாம் ஈழப்போரின் ஆரம்பம்! குணதாச அமரசேகர
சிறைகளில் இருக்கும் விடுதலைப் புலிகளை விடுவித்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஈழத்திற்கான போராட்டம் மீண்டும் ஐந்தாம் ஈழப்போராக உருவெடுக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து மஹிந்த ஆதரவு அணியின் முக்கிய…
பிரபாகரனின் தலை மயிருக்கு கூட மகிந்த பெறுமதியில்லாதவர்: சரத் பொன்சேகரா…
தேர்தல் நேரத்தில் சரத் பேசியதாக கூறப்படும் ஒரு செய்தியை, சமீபத்தில் தான் ஒரு சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாதாக சிங்கள ஊடகம் ஒன்று…
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமை! ஜயதிஸ்ஸ…
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமையளிக்கும் விடயம் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். ராவய பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நளின் ஜயதிஸ்ஸ எம்.பி, தேசிய அரசாங்கம் பெரிதாக எதனையும் சாதிக்கப் போவதில்லை.…
‘வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்’ – விக்னேஸ்வரன்
இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம்…
தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார்.பிரமதருடனான…
வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம…
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் அதன் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தது. இந்நிலையில் குறித்த…
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் இந்திய மீனவர்களின் தாக்கம் உண்டு! மகிந்த…
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் எமது நாட்டு மீனவர்களின் கோடிக்கானக்கான பெறுமதி மிக்க மீன் பிடி வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதாக கடற்றொழில் மீன் பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்…
ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! – சம்பந்தன்…
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு!…
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென…
தமிழினியை வதைத்தது சிங்களம்.., கொன்றது தமிழ்… வெளிப்படும் உண்மைகள்…..!
தமிழினி இறக்கும் வரை யாருக்கும் தெரியவில்லை மாறாக இறந்த பின் இன்று வரை தமிழினியை பற்றி கூறாதவர்கள் இல்லை, தமிழினி இறந்தது இயற்கையானாலும் அதில் பல உண்மைகளும் மர்மங்களும் மறைந்துள்ளது. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில்…
கிளஸ்டர் குண்டுகளை பாவித்ததாக எழுதியதால் தான் எக்னலியகொட இறந்தார்- ருயிட்டர்ஸ்…
5 வருடங்களுக்கு முன்னர் காணமல் போன பிரகதீப் எக்னலியகொடவை இலங்கை அரசின் ஏஜண்டுகளே கத்திக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான ருயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும். அதில் உள்ள அனைவரும் முன் நாள் ராணுவச் சிப்பாய்கள் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இலங்கையில்…
பரணாகம மோசடி..! பரிபூரண மோசடி…!
இன்றைய திகதியின் 'நியூஸ் சென்டர்' - மாக்ஸ்வல் பரணாகம தான். 'அவரே சொல்லிவிட்டார்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே அறிக்கை விடுகிற அளவுக்கு நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது. உண்மையில், பரணாகம அறிக்கைதான், இதுவரை நடந்த மோசடிகளில் மகத்தான மோசடி. புயலில் தலைவிரித்தாடுகிற பெருமரங்களைப் போல, பேயாட்டம் போட்டது இலங்கை…
ஐ.நா. தீர்மானத்துக்கு முன் பரணகம அறிக்கை வெளிவந்திருந்தால் நாடு நாசமாகியிருக்கும்:…
ஐ.நா. தீர்மானத்துக்கு முன்னதாக மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தால் நாடு நாசமாகியிருக்கும் இதனால்தான் இந்த அறிக்கையை அரசு முன்கூட்டியே வெளியிடவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில்…
16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு: கொலை செய்த பொலிஸ்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி-…
புலித்தேவனை காப்பாற்ற நினைத்தே வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிக்க வேண்டி வந்தது!…
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு…
மைத்திரியை கொலை செய்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது- வாய் திறக்கும் பிள்ளையான்…
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அந்த நபர்களை கொலை செய்வதற்கான காரணம் தனக்கு தெரியாதெனவும் கிடைக்கின்ற ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டதனை மாத்திரமே…
ஐ.நா அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: அல் ஹுசேன்
இலங்கை தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத் தொடரின் 3ஆவது குழுக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், 2014 ஓகஸ்ட் தொடக்கம்…
பரணகமவின் அறிக்கையும் பழுதாகிப் போகுமோ!
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி - மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை நடந்த உண்மைகள் பலவற்றை உறுதி செய்வதாக இருப்பது கண்டு மனம் ஆறுதல் அடைகிறது. சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை பொய்யானவை என்று ஓரம்கட்டி விட முடியாது என்று குறிப்பிடும் ஆணைக்குழு,…
வெளிநாட்டு நீதிபதிகள் வராவிட்டால் வெளிநாட்டுப் படைகள் வரும்
பொதுநலவாயம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னத்துடன் உள்ளக விசாரணை நடைபெறுமாக இருந்தால், அது நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயலாக இருக்கும் என்றும் உள்ளக விசாரணையில் பங்கேற்க வெளிநாட்டு நீதிபதிகள் வருவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றி ணைந்த எதிர்க்கட்சிகளின் மகிந்த அணியின் முக்கியஸ்தரான…
“வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா விரும்பியது”
இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும், காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த…
