பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கையில் முதன் முதலாக ஒரு சம்பவம்- ஐ.நா குழு விசாரணைக்கு…
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளது. பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்தப் பிரதிநிதிகள்…
அரசியல் கைதிகளின் விடுதலையினை யாரும் எதிர்க்க முடியாது: சரத் பொன்சேகா
இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.…
போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுகின்றது!- சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா பா.உ
போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது. போர் காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்கியமை…
62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில்…
தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவைக் குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றக்…
போர்க்குற்றவாளிகளை எவரும் தண்டிக்கலாம்! மஹிந்த, கோத்தா சிறையில் இருக்கவேண்டியர்கள்!! –…
போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும்,போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடிச் சம்பவம்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – சுமந்திரன்…
தமிழ் அரசியல் கைதிகள் நம்பவர் 7ம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஏம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். அத்துடன், தமிழர்கள் என்பதாலா…
நல்லிணக்கத்தை திணிக்க முடியாது: ஜப்பான் தூதுவரிடம் விக்னேஸ்வரன்
ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கெனின்சீ சுகனூமா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றிருந்தது. மேற்படி சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதன்போது பல்வேறுபட்ட…
புலிகளின் இனச் சுத்திகரிப்பு குறித்து நான் கவலை கொள்கிறேன் என்கிறார்…
விடுதலைப் புலிகள் இனப்படுகொலை செய்தார்கள் என்றும். அதற்காக தான் வெட்கப்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது அவர் குறிப்பிடுவது , புலிகள் யாழில் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்பாக வெளியேற்றிய விடையத்தை தான். இவர் யாரின் தலைவர் என்று தெரியவில்லை. மட்டக்களப்பு வீரமுனை கிராமத்தின் படுகொலை தெரியுமா இவருக்கு ? பிறந்த…
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் காதலர்களைக் கை கழுவும் யுவதிகள்! சரியும்…
நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தன்னைக் காதலித்த இளைஞனை ஏமாற்றி வெளிநாடு செல்ல முற்பட்டதால் குறித்த இளைஞன் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நீ என்னுடன் தொடர்ந்து கதை, எது வேண்டுமானாலும் என்னைச் செய்... ஆனால் கலியாணம்…
ஈழத்தை ஆட்கொண்டுள்ள பிரித்தாளும் தந்திரோபாயம்! தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!
1921ம் ஆண்டில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்தாளும் தந்திரோபாயம் இன்று வரை தமிழர்களை விடுவதாக இல்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழின தலைமைத்துவத்தினை உடைப்பதில், இன்று வரை பிரித்தாளும் தந்திரோபாயம் செயற்பட்டுக் கொண்டே வருகின்றது. அந்தவகையில் தமிழினத்தினை தாங்கும் மற்றும் தாங்கிய இரண்டு முக்கிய கட்சிகளில்…
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த…
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. இதன்படி முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கை இம்மாத…
அரசியல் கைதிகள் விவகாரம்: இவ்வாரம் இறுதி முடிவு! – ஜனாதிபதி,…
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின் போது கைதிகள் விடுதலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது…
யுத்தப் போர்வையில் குற்றம் இழைத்தோருக்குத் தண்டனை! உண்மையைக் கண்டறிவது அவசியம்!…
பயங்கரவாதத்திற்குள் மறைந்துகொண்டு கொலைகளைச் செய்த, ஆட்களைக் கடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். எனவே, உண்மையைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்பு செய்த படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். உண்மையைக் கண்டறிவது என்பது நாட்டைக்…
வடக்கைப் பிரபாகரனிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தார் ராஜபக்ச!
சிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ஆம் நாள் நடந்த, “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின்…
மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பரந்தனில் கோரிக்கைகள்
'மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக வடக்கு கிழக்கு பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' இலங்கையின் மலையகத்தில் மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மலையக மக்களுக்கான வீடுகள், காணி உரிமைகள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு மாகாணத்தின் பரந்தன் நகரில்…
பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் என்கிறார் கருணா
பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் எனவும், எனினும் அவருக்கு உலகமயமாக்கல் குறித்த அறிவு கிடையாது எனவும், கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் இடம்பெற்ற…
புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர்!- மாரப்பன – அரசியல்…
தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விரைவில்…
போர்க்குற்றங்களை புலிகளே செய்தனர்! இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்யவில்லையாம்! டெஸ்மண்ட் சில்வா
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளே ஒன்றுக்குபின் ஒன்றாக பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சேர் டெஸ்மண்ட் சில்வா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கிலாந்து ராணியின் வழக்கறிஞரும், சர்வதேச நீதிக்கட்டமைப்பு ஆலோசகருமான சேர் டெஸ்மண்ட் சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் இறுதிக்கட்டப்…
‘தமிழ் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’
இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சனியன்று யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றார். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை…
சரணடையும் திட்டத்துக்கு பிரபாவும் பொட்டுவும் இணங்கவில்லை!– சொல்ஹெய்ம்
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த…
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் தீர்மானித்துள்ளனர். போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருப்பதாக…
ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! சவால் விடுகிறார் கருணா அம்மான்
இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல்போனோரைக் கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவின்…
“மஹிந்த,கோட்டா,முப்படையினருக்கு தண்டனை கிடையாது”
ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்மையில் ஐ…
