பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தெற்கு தீர்வை தர தயாராவில்லை! சுரேஸ் குற்றச்சாட்டு!!
தென்னிலங்கையைப்பொறுத்த வரையில் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறுகின்ற தெற்கு அரசியல் வாதிகள் எவருக்குமே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் மனப்பான்மை இல்லை. அந்த வகையில் தான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கிற்கும் சந்வதேசத்திற்கும் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருந்தது. அதன் பிரகாரம் தான் இனப்பிரச்சனைக்குத்…
13 பற்றி இனி பேசவேண்டாம் – சுரேஸ்!
இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு…
சிங்கள ராணுவத்தை சர்வதேச நீதிமன்றி நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியது தானே என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதியோம். சர்வதே விசாரணைகள் எங்களிற்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆங்கிலபத்திரிகையொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனீவா…
கூட்டமைப்பின் வெற்றிக்கான மந்திரம்!
இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் நம்பியிருப்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தான். காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்கு வைத்திருக்கும் 20 ஆசனங்களில் மூன்றில் ஒரு…
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பான் கீ மூனின் பாரிய திட்டம்…
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.நா மற்றும் உலக நாடுகளின் திட்டம் என்ன..? நடை பெற உள்ள தேர்தலில் மேற்குலகின் இலக்கு யார்...? ஐ.நா.செயலாளரின் திட்டம் என்ன..? செப்ரம்பர் மாதக் கூட்டத் தொடரை இலக்கு வைத்துள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் தமிழரின் வாக்குக்குகள் யாரைத் தெரிவு செய்யும்..? தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன..?…
தமிழ் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையட்டும்!
இது கறுப்பு ஜுலை வாரம். தாயகத் தமிழர்களின் இதயங்களில் விடுதலை நெருப்பை மூட்டிய வாரம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக ஈழத் தமிழினம் தனது உரிமைக்களை இழக்க ஆரம்பித்திருந்தது. தமிழ் மக்களினதும், தமிழ் தலைவர்களினதும் வேண்டுகோள்கள், கோரிக்கைகள் என்பன காலத்துக்கு காலம் இலங்கையை ஆண்ட சிங்கள அரசுகளால்…
இந் நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை!: இரா.…
இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது! (தேர்தல் அறிக்கை…
பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.…
ஆயுதபலத்திற்கே தெற்கு மரியாதை தந்தது! சித்தார்த்தன் கூறுகின்றார்!!
தமிழ் மக்களது ஆயுதபலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையினில் தென்னிலங்கையிலுள்ள இருபிரதான கட்சிகளும் தமிழ் மக்களிற்கு எதனையும் தராது இழுத்தடிக்கவே முற்பட்டுள்ளன.ஆனால் 2000 மாம் ஆண்டுகளினில் சமஸடி பற்றி தென்னலிங்கை ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டிருந்தனரென தெரிவித்தார் தர்மலிங்கம் சித்தார்த்தன். அதே வேளை ஓன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின்…
எமது மக்கள் ஏற்றுக்கொள்ளும் சுயாட்சி தீர்வே எமக்கு வேண்டும்: த.தே.கூ
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுயாட்சி தீர்வே எமக்கு வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மற்றும், உறுப்பினர்களின் கருத்துக்கள் இங்கே திருகோணமலையில் ஒரு ஆசனத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவோம்: இரா.சம்பந்தன் திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
ஒரு உறுப்பினரைக்கூட தெரிவு செய்யமுடியாத கட்சிகளும் களத்தில்: இரா.சம்பந்தன்
தேர்தலுக்கு பின்னர் தாமதமில்லாமல் மிகவிரைவாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதற்காக மிக நீண்டகாலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். லங்கசிறியின் 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு…
ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு: ஐதேமு தேர்தல் அறிக்கை
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சகலதரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரசனைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும்…
இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: மங்கள சமரவீர
இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில்…
இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம்…
இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட…
தமிழகத்தில் கைதானவர் வாய் திறக்கவே இல்லை: புலிகள் இயக்கத்தில் இருந்தவர்…
75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம்…
இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது – அமெரிக்க…
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவு இந்திய பிராந்திய வலய நாடுகளைப் போன்றே முழு உலகிற்கும் முக்கியமானது. தென்கிழக்காசியாவின் பிரதான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கை…
தேர்தல் நூதனங்களும், தமிழர் தேசமும் – கலாநிதி சேரமான்
ஈழத்தீவின் அரசியலில் என்றுமே நிகழ்ந்திருக்காத பல நூதனமான சம்பவங்கள் கடந்த இரண்டு வார காலப்பகுதியில் அரங்கேறியிருக்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள தேசத்தின் பக்கம் எமது கவனத்தை நாம் திருப்பினால், அங்கு அதியுச்ச அதிகாரத்தைக் கொண்டவராகத் திகழும் அரசுத் தலைவர் மைத்திரிபால சிறீசேன, தான் தலைமை வகிக்கும் கட்சியைக்கூட கையாள முடியாத…
வீழ்கின்றன கூட்டமைப்பு தலைமைகள்?
வட- கிழக்கெங்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பிரபலங்களிற்கு கிடைத்து வரும் எதிர்ப்பு கட்சி தலைமையிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வட்டுக்கோட்டை தொகுதியை இலக்கு வைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். எனினும் அவர் உள்வருவதற்கு பல கிராம அமைப்புக்கள் தடைவிதித்துள்ளன. நீங்கள் கதிரையிலிருந்து என்ன…
இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது!– பிரித்தானியா
கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம் காணப்படுவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொது நலவாய விவகார அமைச்சின் 2015ம் ஆண்டின் நடுப்பகுதிக்கான மனித உரிமை அறிக்கையில் இந்த…
மகிந்தவை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவே நான் தேர்தலில் குருநாகலில் போட்டியிடுகிறேன்-சிவாஜிலிங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா , சரத் பொன்சோகாவையும் சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித தேர்தலிலும் போட்டியிட தயாராகியுள்ளேன். இத்தகைய நிலையில் எனக்கு பணம் மகிந்த ராஜபக்சாவினால் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவினால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? என்;பதை அனைவரும்…
தமிழ் மக்களின் தெளிவும் மெளனமும்….திண்டாடும் அரசியல்வாதிகளும்
தேர்தல் வேட்பு மனு கொடுக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் திருவிழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துவரும் அரசியல்வாதிகள், பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து கூட்டங்கள், விளம்பரங்கள் என்றும் உணவு உறக்கம் இன்றி நாடு முழுவதும் அலைந்து திரியும் நிலையில் கருத்து மோதல், கட்சித் தகராறு என்பதையே…
ஓற்றையாட்சிக்குள் வாழமுடியாது தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்!
சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்கு கீழ் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்கு தேசிய அந்தஸ்தும் சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவின் சட்டங்களும் தமிழர்களை அடக்கி ஆள்வதற்காகவே உருவாக்கப்பட்டன. உரிமை மறுக்கப்பட்டதாலும் அநீதி தொடர்ந்ததாலுமே எமது இளைஞர்கள்…
சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றச் செயற்படுகிறது கூட்டமைப்பு –…
சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…
