நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் கடும் பதற்றம் -நீதிமன்ற உத்தரவை…

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆலய வளாகத்துக்கு அண்மையில் பௌத்தமத குருவின் உடலை புதைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைப்பது தொடர்பான பல்வேறு…

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்…

இலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள்…

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை நடந்திய சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு தொகை ஆயுதங்களை இன்று (புதன்கிழமை) போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தத் தகவலை போலீஸ் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் துறைமுக வீதியிலுள்ள வளவு…

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரின் மகனா ஈஸ்டர் குண்டு வெடிப்பு…

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார்.…

மாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்; தீவிர தேடுதலில் இந்தியா!

மண்டபம் அகதிகள் முகாமில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் அவர் கனடா நாட்டில் வசிப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்…

இலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய…

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்று…

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும் பேசத் தயார்; சஜித்…

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றார் என்பதே எமக்கு முக்கியம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “அத்துடன், தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும்,…

பலாலி விமான நிலையம், யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம்!

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தின் பெயரை ‘யாழ். விமான நிலையம் (JAF)’ என்று பெயரிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வொன்றுக்காக அண்மையில் இலங்கை வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் கனிமொழிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே,…

இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள்

இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான உர. விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள்…

வட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்

வடக்கில் இராணுவத்தார், பொலிஸாரால் கையகப்படுத்தி பயன்படுத்தப்பட்டு வரும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாக மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னர் வட மாகாண ஆளுநரால் யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளங்கண்டு அவற்றை உடனடியாக…

தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி…

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிராக நாடாத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியும் இன்று வரை…

“இலங்கை போர் நடந்த போது கூட இப்படி இல்லை” –…

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு தனது ஆளுகைக்குள்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் இப்போது என்ன…

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு,…

வடக்கு – கிழக்கு இணைவு’, ‘சமஷ்டி’ ஒருபோதும் சாத்தியம் இல்லையாம்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கூட்டாட்சித் தீர்வை (சமஷ்டி) வழங்க முடியாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது, நாட்டிலுள்ள அனைவருக்கும் சம அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தோம். அதுவே எமது நிலைப்பாடு.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான…

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த…

விடுதலைப்புலிகள் அமைப்பை கோட்டாவின் மேடையில் தவறாக பேசிய தமிழின துரோகி…

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு…

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்?

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமையே நிலவி வருகிறது. காணாமல் போன…

இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள…

தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்

தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும்,…

போராடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே மார்க்கம்!

விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றால்…

புதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

கோட்டாவை கொலை செய்ய முயற்சி?! சிவரூபன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்?!…

கிளிநொச்சி – பளை வைத்தியர் சிவரூபன் வழங்கிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து இந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளிலுள்ள சிலரின் உதவியுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை கொலை…

இலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் உடற் பாகங்களை மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிராகவும், அந்த உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறும் கோரி, அந்தப் பிரதேச மக்கள் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று…