ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சற்று முன் (12.30 PM) நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய வடமாகாணம் முழுவதும் ஊர்வலமாக சென்ற நிலையில் இன்று…

இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழப்பு!

போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த நிலை தொடர்ந்தால் நேரடி சாட்சிகள் முழுமையாக அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (15.05.2018) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்…

தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்

முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,  மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே,…

இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட மே-18 நாளை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்!

முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் எனவும், முள்ளிவாவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஷ்டிப்போம் எனவும் பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அத்துடன் மே-18 அன்று காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதி…

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட…

இறுதி கட்ட யுத்தத்தின் போது நடந்தது என்ன? அதிர்ச்சியான பல…

இறுதி கட்ட யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் உயிரிழந்தவர்கள் யார். எமது தேசத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் அல்லவா. அவர்களை நினைவு கூருவதில் என்ன தவறு காணப்படுகிறது என சுகாதார அமைச்சரும் , அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த…

தமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால்!

தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி குறிப்பில் மேலும்…

முள்ளிவாய்க்காலில் அழுவதற்குக் கூட அநாகரிக அரசியல் அடம்பிடிக்கிறது..

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க வேண்டியதே எமது தார்மீக கடமை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளாா். இன்று செவ்வாய்க்கிழமை(15-05-2018)…

உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்

முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை…

அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை

உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில்,  பௌதீகவள  அபிவிருத்திகள் என்பது, அரசியல்…

காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை வெளியிட்ட உறவினர்கள்

காணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது. இந்தக் கலந்துரையாடலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றதாகவும், இது வெற்றிகரமானதாக அமைந்தது என்றும், பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்…

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா

“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர்…

கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என…

இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’

இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர்…

தமிழ் பெண்களை வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துகின்றன புலனாய்வுத்துறையினர்..

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என பல்வேறு பெண்களை புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாக, மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை இன்று சனிக்கிழமை(12.05.2018) முதல் கட்டமாக…

தமிழின படுகொலை வாரத்தின் முதலாவது நாள் செம்மணியில் ஆரம்பம்!

தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாள் அனுஷ்டிப்பு செம்மணியில் நேற்றுக் காலை நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது…

லண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை ஓடக் கூடாது என்று…

லண்டனில் வரும் ஞாயிறு(20ம் திகதி) "18.05.2009" என்னும் Kollywood திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் சனல்4ல் கூட காண்பிக்காத பல உள்ளக தகவல்களோடு பல கட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால். மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேவேளை கருணா…

யானையால் 25 தமிழர்கள் பலி..

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றையதினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம்…

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு ஐ.நா. சபை அழுத்தம் கொடுக்கவேண்டும்!

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே மோதல் மூண்டுள்ளதால் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அரசின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்குள் தீர்வை அடைந்துவிடமுடியுமா என்பதும் சந்தேகமே என்றும், எனவே, ஐ.நா. சபையும், அனைத்துலக சமூகமும் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையீடுசெய்து அரசுக்கு…

சோனகர்கள் மாட்டு இறைச்சியை இந்துக் கோவிலுக்கு முன்னால் கொட்டிச் சென்றுள்ளார்கள்

மட்டக்களப்பில் இந்துக் கோவிலுக்கு செல்லும் வழியில், மாட்டு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததால். கோவிலுக்கு செல்லும் பக்த்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இன் நிலையில் இந்த இறைச்சிக் கழிவுகளை சில முஸ்லீம்களே அங்கே கொட்டிச் சென்றதாக பொலிசார் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக அதிர்வு இணையம்…

தமிழ் மக்களின் அரசியல், கலாசார, பொருளாதார உரிமைகளை எவராலும் மறுக்க…

தமிழ் மக்களின் அரசியல், கலாசார, பொருளாதார உரிமைகளை எவராலும் மறுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…

ஜந்து மாவட்டங்களில் இனப்படுகொலை வாரம் 12 ஆம் திகதி ஆரம்பம்..

தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்படுகொலை வாரம் இந்த ஆண்டும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் செம்மணிபகுதியில் எதிர்வரும் 12 ஆம் திகதி இனப்படுகொலை வாரம் ஆரம்பித்து வைக்கப்படும் எனஅவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட…

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…