பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல; விக்னேஸ்வரன்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பல்கலைக்கழகத்துக்கு ஊடாக வந்தவர்கள்தான் நாங்களும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண…
தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிக்க மூன்று வருடங்களாக முயற்சித்த இலங்கை…
தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிப்பதற்காகவே தான் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருட காலப்பகுதியை செலவழித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் தெரிவித்திருக்கின்றார். “பயங்கரவாதம்” என்று தமிழ் தேசிய நிலைப்பாட்டை அடையாளப்படுத்திய ஸ்ரீலங்கா அரச தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் இன்னமும்…
இளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் –…
சரணடைந்த கேணல் ரமேஷை கொண்டு சென்ற அதே முகாமுக்கு , இந்த இரண்டு விடுதலைப் புலிகளையும் கொண்டு சென்றுள்ளார்கள் சிங்கள ராணுவம். இந்த முகாம், மிகவும் ரகசியமான ஒரு இடத்தில் இயங்கி வருகிறது. பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சாப்பிடச் சொல்லி பின்னர் அவரை சுட்டுக் கொன்றது போல. இவர்களுக்கு…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் கலப்பு வேண்டாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
எதிர்வரும் மே 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கலப்பு வேண்டாம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
சிங்கள குடியேற்றங்களை வடக்கில் ஏற்படுத்துவது இராணுவம்!
பௌத்தர்கள் இல்லா இடங்களில் புத்த சிலைகளை நிறுவ உதவி புரிவது இராணுவம். மகாவலி சபையினருடன் சேர்ந்து சிங்கள குடியேற்றங்களை வடமாகாணத்தினுள் ஏற்படுத்துவது இராணுவம். என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை (சிலோன்…
முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?
15 மாதங்களின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பாவக்குளம் படிவம்-1 கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது., வடமாகாண தற்போதைய முதலமைச்சர்…
எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது
அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
KP எப்போது கைதானார் ? இதுவரை வெளிவராத ஒரு விடையம்…
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி, தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் களப்பு வழியாக தப்பிச் சென்றார் என்ற செய்தியை முதல் முதல் ஊடகங்களுக்கு தெரிவித்தவர் KP. பின்னர் மறு நாள் தலைவர் இறந்துவிட்டார் என்று கூறி அழுது புலம்பியதும் KP தான். நாடு கடந்த…
இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் நேற்றிரவு வருகை தந்த 14 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர்கள் வருகை தந்த படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.…
நீதிபதி இளஞ்செழியனினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள்!
பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும்…
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை’ பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்க அழைப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் கட்சிகளின் சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு நிமிட நேரங்களே ஒதுக்கப்படுமென யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, யாழ். கொழும்புத்துறை…
வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள், ஆர்.பி.ஜி,துப்பாக்கி செலுத்திகள், என்பன இதன்போது…
‘பிரபாகரனுக்கு இணை அவர் மட்டுமே’
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென” தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (03) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே…
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள்…
பிரபாகரன் இறந்துவிட்டார்; கஜேந்திரகுமாரின் வழியில் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டும்:…
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார். ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காக பயணிக்க வேண்டும்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள்…
முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டனர்
.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நேற்று வேட்கை என்ற நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஈகச்சுடர்கள்…
கருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு: அமைச்சு பதவி…
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணாவை, அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம்.முரளிதரனின் பாடசாலை காலத்து நண்பராகிய அலிசாஹிர் மௌலானா இந்த பிரிப்பு வேலையில் ஈடுபட்ட பின்னர் , தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில்…
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அணி திரள்வோம்: இரா.சம்பந்தன்
“இலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.” என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
இன அழிப்புக்கு எதிரான தற்காப்புப் போராட்டத்தையே தமிழ் மக்கள் முன்னெடுக்கின்றனர்;…
“இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள தேசம் கருதுவதனாலேயே தமிழ் மக்களை இன அழிப்புச் செய்கின்றது. தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இவ் இன அழிப்பைத் தடுப்பதற்கான தற்காப்புப் போராட்டமாகும்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுமைய ‘மே’ தினப்…
சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப்…
நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்
இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும். சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வருடப் பிறப்பு, பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது. அவர்கள், பெரும்…
அரசியல் தீர்வு காணப்படாத நிலையில், 20வது திருத்தத்தை த.தே.கூ ஆதரிக்காது:…
புதிய அரசியலமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு முன், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20வது திருத்தச் சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.…






















