பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்
அண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை. பரிதாபகரமான வாழ்விடங்கள், சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான…
போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்
தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவகால, பூகோள…
வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர்…
வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல…
’காணாமல் ஆக்கப்பட்டோர்: ஜனாதிபதியின் முடிவுகளில் திருப்தியில்லை’
காணாமல் ஆக்கப்படோர் தொடர்பில், ஜனாதிபதியுடனான சந்திப்பின் முடிவுகளில் திருப்தியில்லை எனவும் இவ்விவகாரத்துக்கு, சர்வதேச விசாரணையே அவசியம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் . காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (16) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கு,…
இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா…
சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளை நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
வட மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசிய கொடியை ஏற்ற…
வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கை தேசிய கொடியை ஏற்ற வட மாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். வவுனியா - ஈச்சம்பெரியகுளம் பெரகும் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வட மாகாண கல்வி…
யாழில் ஆவாவுக்கு எதிராக, பல வாள் வெட்டு குழுக்கள் ;…
யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை…
தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச்…
தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், கைது செய்யப்பட்ட 50 இற்கும் அதிகமானோர் சித்திரவதை…
சிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக்…
சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் அண்மைக்காலத்தில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக, ஏபி வெளியிட்ட…
நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை
நாட்டை பிரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கூட்டுஎதிரணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான ஒன்றென எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்…
த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்
தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிதாக வரப்போகும் கடை…
கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான…
தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் இதுதான்..! விளக்குகிறார் விக்கி..
நாமே தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாக கைவிடுவதற்கு எமது தலைமைகள் முன்வந்தமையே கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் போரில் வென்றார்கள். எனவே எமக்கு எமது சட்டரீதியான நியாயமானகோரிக்கைகளை அதன்பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்மவர் …
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போர்.. இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால…
கொழும்பு: ''இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,'' என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு…
3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த இந்தப் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை இடம்பெற்றது. அனுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருந்த 3 அரசியல் கைதிகளின்…
கனேடிய வாழ் இலங்கை தமிழ் மக்களை, ஏமாற்றுகிறதா கனடா?
கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது லிபரல்…
‘நல்லாட்சி வெளிவேடம்’
“நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்
செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார். இடைக்காலப் பரிந்துரைகளை உருவாக்குவதில்…
‘தமிழ்த் தலைவர்களின் செயற்பாட்டால் அழிவுப் பாதையில் தமிழ் இனம்’
தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட…
‘வெறுமனே இனவாதத்தைத் தூண்டுகின்ற இழிவான அரசியலை மேற்கொள்ளாதீர்கள்’
“தமிழ் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி, வெறுமனே இனவாதத்தைத் தூண்டுகின்ற எந்தவொரு இழிவான அரசியல் கலாசாரத்தையும் மேற்கொள்ளாதீர்கள்” என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சுமார் 5,000 மாணவர்களுக்குப் பாடசாலைப்…
சித்திரவதை குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறிலங்கா
அண்மைக்காலங்களில் சிறிலங்காவில் 50இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த புதன்கிழமை,…
தமிழர்கள் மீதான சித்திரவதை குறித்து விசாரணை நடத்தப்படும்!
தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அயலுறவுத்துறைச் செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்ட 52 தமிழர்களின் சாட்சியங்களுடன், அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அயலுறவுத்துறைச் செயலர்…
‘இணைக்காது அதிகாரத்தை தா’
“இந்த நாட்டில் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது” என, இராஜங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (08) ஐந்தாவது நாளாகவும்…























