போர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க முடியும்: திலக்…

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கை விசாரிப்பவர்களாக பங்கேற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பிலும் இடமில்லை. ஆனால், விசாரணையைக் கண்காணிக்கும் நபர்களாக பங்கேற்க முடியும்.’ என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித…

வடக்கு, கிழக்கில் அத்துமீறி புத்தர் குடியேற அமெரிக்கா தடை!

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை நிர்மாணிப்பது தொடர்பில் அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை…

பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற…

புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பை பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக்…

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், நோர்வேயின் முன்னாள் சமாதானத்…

மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்!

மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்தித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையக பிரதிநிதி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜெனீவாவில் இருந்து வருகை தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் சந்தித்துள்ளனர். கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக அவர்களது உறவினர்கள் 179ஆவது நாளாகவும் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

ஊழல் நிறைந்த சபையாக வடமாகாண சபை வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது!…

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன் வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில்,…

காணி விடுவிப்பு: சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று கோரி…

இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் இரா. சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கே குறித்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில்,…

தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க வலியுறுத்தி கடிதம்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழ். மாநகராட்சிக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார். தியாகி திலீபனின் நினைவிடம் எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லை வேலிகளை அமைத்து பாதுகாக்குமாறு குறித்த…

காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு

முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தேடி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ…

தமிழர்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் சொத்துக்கள்! திட்டமிட்டு நடத்தப்படும் குடியேற்றங்கள்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் தாயக மக்களின் நிலங்களை சூறையாடும் தீவிர முயற்சியில் தென்னிலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது யாவரும் அறிந்த விடயமாக உள்ளது. இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது.…

விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரியது!

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ்அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கு முதலமைச்சர் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் படையில் இணையச் சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்…

தமிழ்த் தலைமைகள் எங்கே? இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை! களத்தில்…

பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தமை வரவேற்புக்குரியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச இணைப்பாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒரு பௌத்ததேரர் என்ற துர்ப்பாக்கிய நிலை வந்துள்ளது என்பதை நினைக்கும் போது வேதனையாகவுள்ளதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்!

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணர வைத்துள்ளது. அதிகாரமற்ற அரசியல் ஆளுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என…

யாழில் இடம்பெறும் வன்முறைகளின் பின்னணி என்ன? சூழ்ச்சியை அம்பலப்படுத்திய இராணுவ…

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை என மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எவ்வித வன்முறை சம்பவங்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட எந்தவொரு விடுதலை புலி உறுப்பினர்களும் தொடர்பில்லை என தான் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் தெரிவிப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர்…

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் – பொதுமக்கள் இடையே…

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக் கூடத்திற்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று செவ்வாய்க்கிழமை பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரோ உள்ளிட்ட பொது மக்கள் அத்து மீறி நுழைய முற்பட்டபோது, அந்த இடத்தில் ஓரிரு மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது. நீதிமன்ற தடை உத்தரவை மீறியும்,…

தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது:…

ஈழத் தமிழர்களின் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,…

வாழைச்சேனையில் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை பிரதேச பொது மக்களால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் வாக்குகளால் வந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில்…

தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றும் முஸ்லிம் அமைப்புக்கள்! சுமணரத்ன தேரர்…

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து…

சுமத்ரா தீவில் படகில் தத்தளித்த 30 இலங்கை அகதிகள் மீட்பு!…

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் நியாஸ் தீவுப்பகுதி அருகே படகில் தத்தளித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (13) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு உப்புக்கராச்சியில் உள்ள லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஜனநாயக…

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் தீவிரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், தேவைப்படின் முப்படைகளின் உதவியை சிறிலங்கா…

வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது:…

வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சில குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்செயல்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவா குழுவானது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று கூறியுள்ள…