நல்லூரை நோக்கி தமிழ் கலாச்சாரத்துடன் படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை…

திருகோணமலையில் எங்களது தொன்மை அழிவடைகின்றது: யாழில் குமுறிய இளைஞன்

திருகோணமலையில் எங்களுக்கு அடி விழுகிறது எனத் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் யாழில் மனம் குமுறியுள்ள சம்பவம் பலரையும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை…

சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு: தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பயம்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளன. தென்னிலங்கை அரசியலில் பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சை சில திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. யாரும் எதிர்பாராத நேரத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை துறந்திருந்தார். இதனைத் தொடர்ந்து…

உலக சைவ இளைஞர் மாநாடு சைவத்தமிழ் எழுச்சிப் பேரணியுடன் யாழில்…

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நாளை மறுதினம் வரை மூன்று தினங்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. “தமிழ் எங்கள் மொழி.. சைவம் எங்கள் வழி” எனும் மகுட வாக்குடனும், “சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும்…

தமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது: சுரேஷ்

எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலாச்சாரம், பண்பாடு என்பன ஒன்றித்துப் போயுள்ளது. எமது மொழி, சமயம், வாழ்க்கை முறை என்பவற்றையொட்டி எமது பண்பாடுகளும், நாகரீகங்களும், பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன. ஆகவே, இவை அழிக்கப்படும் போது எமது இனம், மொழி, நாகரீகம், பண்பாடு என அனைத்தும் அழிக்கப்படும். இதனைக் கலாசாரப்…

வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர். எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால் இந்த மக்களிடத்திலே பாதுகாப்பற்ற மனநிலையும் பதற்றங்களுமே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான…

50 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர்!…

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் நலனுக்காக அல்லாமல் தமது அரசியல் எதிர்காலத்திற்காக செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன்…

6 மாதகால போராட்டத்தில் மூவர் மரணம்! நீதி வழங்குவது யார்?…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாயார் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இது மனித உரிமையை மதிக்கின்ற நாட்டிற்கு நல்ல விடயம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய…

இலங்கை அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது! சம்பந்தன்

மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது, கருத்து…

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு!

வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு! – இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று சம்பந்தனிடம் பிரிட்டன் எம்.பிக்கள் குழு வாக்குறுதி (photos) “வடக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கில் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று நினைக்கின்றோம்.”  இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

தமிழகத்தில் போராட்டம் வலுத்தாலும் இலங்கை அரசின் கொள்கை மாறாது! மகிந்த…

தமிழ் நாட்டில் எத்தகைய போராட்டம் நடத்தப்பட்டாலும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை அரசு கைவிடாது என கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த…

தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக்…

யாழ். குடாநாட்டில் பலருக்கும் குறி! தொடரும் தேடுதல் வேட்டை

கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ள போதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது…

ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழ்த் தலைமைகள் கோடாரி காம்புகளாகின! யாழில்…

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது அவர்களின் சொந்த விவகாரமல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகத் தான் அவர்கள் அரசியல் கைதிகள் ஆனார்கள் என பிரபல அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டு ஐந்து…

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட…

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்! ஈழத்…

மஹிந்தவும் நானும் இணைந்து ஆட்சி!! சம்பந்தன்

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என…

வடமாகாணத்தில் 5 இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு: அனர்த்த முகாமைத்துவ…

தற்போது நிலவி வருகின்ற வறட்சி நிலை காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பெருமளவிலான மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் வறட்சியினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 12 இலட்சம் பேர்…

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! யாழில் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ். பஸ் நிலையத்திற்கு முன்னால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்புடன் மேலும்…

நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களாகிய நாங்கள் அதீதியாக எதையும் கேட்காது, நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழாராச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்…

தமிழர் பண்பாடு சார்ந்த மாநாடுகள் வடக்கு, கிழக்கில் பேரெழுச்சியாக நடத்தப்பட…

எமது இனத்தின் அடையாளம் மாறாது பாதுகாக்கப்படுவதற்குத் தமிழர் பண்பாடு சார்ந்த இது போன்ற மாநாடுகள் பேரெழுச்சியாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து…

சீ.வியின் நிலை கடும் ஏமாற்றத்தை தருகின்றது!

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நிலை கடும் ஏமாற்றத்தை தருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில்,…

தமிழன் என்ற வகையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் : இரா.சம்பந்தன்

தமிழன் என்ற வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இந்த நாட்டில் வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13ஆவது உலக…

கடும் அதிருப்தியில் இந்தியா! குழம்பிப்போன கொழும்பு அரசியல்

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை சீனாவிற்கு வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களின் தீவிர தன்மையை உணர்ந்து கொண்ட இந்திய மத்திய அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் உயர் மட்ட…