பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிரெக்சிட் விவகாரம்- பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்…
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு…
அமெரிக்கா வந்துள்ள முக்கிய வட கொரிய அதிகாரி: மீண்டும் டிரம்ப்…
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்பு வட கொரியாவின் அரசு தரப்பபை சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார். கிம் யோங்-சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான…
வெனிசுலா நாடாளுமன்ற சபா நாயகர் கைதாகி விடுதலை! : வியட்நாமில்…
வெனிசுலாவில் அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தின் சபா நாயகரான ஜுவான் கெய்டோ என்பவரைக் கைது செய்து விடுவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 10 ஆம் திகதி சுப்ரீம் கோர்ட் முன்னிலையில் 2 ஆவது முறையாகவும்…
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி: ஏமாற்றமும், வரவேற்பும்
பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார், இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகளையும்,…
பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி – அரசுக்கு…
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. வரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும்…
வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கைது – அமெரிக்கா கண்டனம்!
வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி…
கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில்…
சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர். ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்ற அந்நபருக்கு கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு நீதிமன்றம் முன்னர்…
நிலவில் தாவரம் முளைத்தது – வரலாற்றில் முதல் முறை
வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா? சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது. நிலவில் உயிரின வளர்ச்சி முதன் முறையாகக் காணப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விண்வெளி…
குர்திஷ் போராளிகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்- துருக்கி நாட்டிற்கு…
சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில்,…
மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் –…
மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப்…
போலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்
அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 53. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலேயே அவர் குத்தப்பட்டார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஐந்து மணி…
இரானில் வீட்டில் புகுந்த சரக்கு விமானம்: 15 பேர் பலி
இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர். தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் ஃபாத் விமான நிலையத்தில் மோசமான வானிலையில் தரையிறங்கிய இந்த போயிங் 707…
முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம்
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க அரசாங்க துறைகள் பகுதியளவு முடங்கியுள்ள சூழலில், இவற்றில் சில பகுதிகளை தற்காலிகமாக மீண்டும் திறக்க வேண்டுமென குடியரசு கட்சியை ஓர் மூத்த செனட்டர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளார். டிரம்புக்கு மிகவும் நெருக்கமான லிண்ட்ஸே கிரஹாம் என்ற அந்த செனட்டர்,…
எப்.பி.ஐ மீது ட்ரம்ப் விமர்சனம்
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது, அந்நாட்டின் புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தால் (எப்.பி.ஐ) விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, எப்.பி.ஐ மீது, கடுமையான விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார். தன் மீதான விசாரணையை மேற்கொள்வதற்காக எந்தக் காரணமோ ஆதாரமோ கிடையாது என, அவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்…
அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் சூசக தகவல்!
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக…
கத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி?
ஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு நிபுணர் தெரிவிக்கிறார். ``கத்தார் நாட்டவர்களுக்கு இரண்டு விதமான சவால்கள் உள்ளன'' என்று சொல்கிறார் லண்டனைச் சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ்…
ரஷ்யாவுக்கு வேலை பார்த்தாரா டிரம்ப்? – விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரகசியமாக ரஷ்யாவுக்காக பணியாற்றினாரா என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணை நடத்தியாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் எஃப்.பி.ஐயின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் கோமியை நீக்கிய அதிபர்…
சுன்னத் முதல் இறைச்சி வரை – ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும்…
ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப்…
அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார்…
அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்)…
இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு தஞ்சம் அளிக்கும் கனடா
தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சௌதி பெண்ணுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது. 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சௌதி பெண் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால்…
‘இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும்’
சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தாமதிக்கப்பட்டால், சிரியாவிலுள்ள குர்திஷ் ஆயுதக்குழுக்கள் மீது படை நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கப் போவதாக, துருக்கி எச்சரித்துள்ளது. சிரியாவிலிருந்து வெளியேறுவதாக ஐ.அமெரிக்கா அறிவித்த போதிலும், அங்குள்ள குர்திஷ் போராளிகளின் பாதுகாப்புத் தொடர்பான கேள்விகள் ஏற்பட்டுள்ளன. எனவே, குர்திஷ் போராளிகளின் பாதுகாப்பை, துருக்கி உறுதிப்படுத்தினாலேயே, வெளியேற்றம்…
வடகொரியப் பக்கம் சாய்ந்தது சீனா
ஐக்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான அணுவாயுதப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவுக்கான முக்கியமான ஆதரவை, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் வழங்கியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இரண்டு தரப்புகளும், மத்திய பகுதியில் வைத்துச் சந்திக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், சீனாவுக்கான 4 நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.…
அமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் – எல்லையை பார்வையிட சென்ற டிரம்ப்
மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை எனில் அவசர நிலைபிரகடனம் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என எல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மெக்சிகோ மறைமுகமாக…