பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தென் கொரிய தலைவர்களுடன் கிம் ஜோங்-உன் விரைவில் சந்திப்பு
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஒரு உச்சி மாநாட்டின்போது வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அரசின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு பிறகும், கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவராக பதவியேற்ற பின்னரும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். தங்கள்…
சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி, அரசு படையினர் நடத்திய வான்வழி…
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள்…
சிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்
கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷியா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக…
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதல் இந்து தலித் பெண்
பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவர் மற்றும் பெண்கள் ஆகியோர்களின் உரிமைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அங்கு முதன்முறை PPP கட்சி சார்பாக ரத்னா பக்வான் தாஸ் சாவ்லா என்ற இந்து பெண் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். தற்போது இதன் அடுத்த கட்டமாக அங்கு சிந்த் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி…
சிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து…
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய…
சமீப நாட்களாக சிரிய உள்நாட்டுப் போரில் அரச படைகள் மற்றும் ரஷ்ய விமானப் படைகளின் தாக்குதலில் 700 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை யுத்த நிறுத்தம் பூரணமாக அமுலாகவில்லை. மேலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஐ.நா இன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்…
புற்றுநோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 1.1…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் வரதராஜன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் டெக்சாஸ் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. நவீன்…
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர்…
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின்…
ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினருடன் இருந்த ஜெர்மன் நாட்டவர் கைது
கந்தகார், ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் மிகுந்த மாகாணமான ஹேல்மண்ட் மாகாணத்தில், தலீபான் அமைப்பைச்சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேரோடு சேர்த்து ஜெர்மன் நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த ஒருவர் தலீபான் அமைப்பினரோடு கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், தலீபான்…
‘ஆப்பிரிக்க குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 2030க்கு பின்னும் தொடரும்’
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று ஐ.நாவின் நிலைபேண் வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தின்கீழ் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாது என்பது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம்…
சிரியா: போர் நிறுத்தம் தோல்வியால் மனிதநேய உதவிகள் பாதிப்பு
உருவாக்கப்பட்டிருக்கும் 5 மணிநேர போர் நிறுத்தம், சிரியா அரசு படைப்பிரவுகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெறும் போரை தடுப்பதற்கு 2வது நாளாகவும் தோல்வியடைந்துள்ளது. கிழக்கு கூட்டாவில் முற்றுகையிடப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு தாக்குதலில் தினமும் இடைவெளி வழங்க சிரியா அரசின் ரஷ்ய கூட்டணி படைகள்…
சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்
ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. உணவு மற்றும் மீட்புதவிகளை வழங்க, தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு, உதவிகளை விநியோகம் செய்யும்…
அதிகார போட்டி.. மதம்.. மரணம்.. சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?
டமாஸ்கஸ்: சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்…
சிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா?
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்…
சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் சவுதி பெண்கள் ஆண்களில் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியில் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுப்பதற்கு…
சிரியா: “பூமியில் உள்ள நரகத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது”
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக…
நாடு கடத்தப்பட்ட போதை மருந்து கடத்தல்காரர்
கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக 250 டன்னிற்கும் அதிகமான அளவு போதை மருந்துகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நபர் ஒருவர் கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஈக்குவேடாரை சேர்ந்த வாஷிங்டன் பிராடோ அல்வா என்ற அந்த நபர் அமெரிக்கா முழுவதும் போதை மருந்து செயற்பாடுகளை மேற்கொண்டதாக வழக்கறிஞர்கள்…
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்…
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். இந்த சூழலை…
சிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான…
மியான்மர்: ரக்கைன் தலைநகரை அதிர வைத்த தொடர் குண்டு வெடிப்பு
மியான்மரில் ரக்கைன் மாகாணத்தின் தலைநகரான சிட்வேயில், 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்ததாகவும், இச்சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார் என்று இதுவரை தெரியவில்லை என்றும் போலீஸ் கூறியுள்ளது. 3 குண்டுகளில் ஒரு குண்டு, உள்ளூர் அதிகாரி ஒருவரின் வீட்டின்…
மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன?
ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டுதான் அவர்கள் ஜீவிக்க வேண்டும். இந்த…
அரசு கூரியர் சேவையை பயன்படுத்தி கொகைன் கடத்த முயற்சி
ரஷ்ய தூதரகத்தில் அரசு கூரியர் சேவையை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு கொகைன் கடத்தும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அர்ஜெண்டினா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2016 டிசம்பர் மாதத்தில் ரஷ்ய தூதரகத்தின் இணைப்பு கட்டடத்தில் சுமார் 400 கிலோ கொகைன் பார்சல்கள் இருப்பதாக ரஷ்ய தூதர் தெரிவித்ததை அடுத்து அவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர்…
நைஜீரியா: பள்ளி தாக்குதலில் காணாமல்போன சில சிறுமிகள் மீட்பு
நைஜீரியாவின் வட பகுதியில் தங்கி படிக்கும் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் காணாமல் போன மாணவிகள் சிலர் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாப்ச்சி நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது, மாணவியரும், ஆசிரியைகளும் புதர்களில் மறைவதற்காக தப்பி சென்ற பின்னர், சுமார் 100 குழந்தைகள் காணாமல்போனதாக…