பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிரியாவில், அரசுப்படைகளின் ஆவேச தாக்குதலுக்கு, 48 மணிநேரத்தில் 250 பேர்…
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். இந்த சூழலை…
தென்னாப்பிரிக்காவில், காவல் நிலையம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு –…
தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுக்கோபோ நகரில் உள்ள காவல் நிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 போலீசார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.…
சிரியா போர்: அரசுப்படை தாக்குதலில் பொது மக்கள் குறைந்தது 100…
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும்…
மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்? ஈராக் படை வீரர்கள் 27…
ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு…
மாலத்தீவில் மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட உள்ளதாக…
மாலே, மாலத்தீவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது, சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார். இதனால், அவரை பதவி…
விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. 66 பேர் பலி..
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது. இதனை அடுத்து,…
பாலத்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 பேர் பலி
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் - பாலத்தீனின் காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து பாலத்தீன பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஞாயிறன்று காசா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்திய கவசவண்டித் தாக்குதலில் இரு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.…
நைஜீரியாவில், தற்கொலைப்படைத் தாக்குதல்.. 19 பேர் பலி..
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி…
அமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் அமெரிக்கப் புலனாய்வு துறை 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது. இவர்களில் 3 பேர் இணையம் தொடர்பில் சதி செய்ததாகவும், 5 பேர் அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016…
கேப் டவுன் ‘ஜிரோ டே’: தைப்பூசத்தை முன்னிட்டு தண்ணீர் வழங்கும்…
தென் ஆஃப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், தைப்பூசக் காவடித் திருவிழாவை முன்னிட்டு, அங்கு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்துமாறும், வாரத்தில் ஒரு…
போர்னியோ தீவில் கொல்லப்பட்ட 1,00,000 ஒராங்குட்டான் குரங்குகள்
இந்தோனீசியா மற்றும் மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்னியோ தீவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒராங்குட்டான் குரங்குகள் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள இந்த குரங்கினம் பற்றிய 16 ஆண்டுகால ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் இந்த எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சி…
அமெரிக்கா: பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.…
தென்னாப்பிரிக்கா: புதிய அதிபரானார் சிரில் ராமபோசா
ஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானபின் தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக்கியதைத் தொடர்ந்து புதிய அதிபராக துணை அதிபர் பதவியில் இருந்த சிரில் ராமபோசா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பதவிக்கு சிரில் ராமபோசாவின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது. 'தேசிய அவை' என்று அழைக்கப்படும்…
ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலி தென்ஆப்பிரிக்க அதிபர் பதவி விலகல்!
கேப்டவுன் : ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்து வந்ததன் விளைவாக தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் தொலைக்காட்சிகள் மூலம் வெளிப்படுத்தினார். தென்ஆப்ரிக்காவில் ஆட்சி நடத்தி வரும் ஆப்ரிக்க நேசனல்…
ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களை பயன்படுத்தும் வட கொரியா
உலக கவனத்தை பெற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏவுகணைகளை ஏவ வேண்டியதில்லை. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதங்களை அவர் வைத்துள்ளார். அது, அவரது பெண் தூதர்கள். கிம் ஜாங்-உன் சமீபத்திய தூதர், 'வசீகர தாக்குதல் நடத்தக்கூடியவர்' என அழைக்கப்படும் அவரது சகோதரி கிம் யோ-ஜாங். கிம் யோ-ஜாங்…
வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்… மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்
வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து…
நைஜீரிய மாணவிகள் கடத்தல்: போகோ ஹராம் பெறும் முதல் தண்டனை
போகோ ஹராம் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிபோக் பகுதியில் இருந்து 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட வழக்கில் முதல் முறையாக ஒரு நபர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஹருணா யாகாயா எனும் அந்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக…
பாகிஸ்தானின் இரும்பு மங்கை, மரணம்..
பாகிஸ்தான் நாட்டின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் அஸ்மா ஜெகாங்கீர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் அஸ்மா ஜெகாங்கீர். மிகச்சிறந்த வழக்கறிஞரான இவர் மனித உரிமைகளுக்காக போராடி வந்தார். இவர்…
அமெரிக்கா அதிரடி! பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தலைவன்…
தேரா இஸ்மாயில் கான், பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியின பகுதியில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் தெரிக்-இ-தலிபான்-பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவன் காலித் மெஹ்சுத் உயிரிழந்தான். பயங்கரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் அசாம் தாகீர் மெஹ்சுத் பேசுகையில், வடக்கு வசிரிஸ்தானில் வியாழன் அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில்…
துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை, சிரியாவில் குர்திஷ் படையினர் சுட்டு…
உள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது. துருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா…
கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71…
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் விமானம், சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர். சராடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.…
“வட கொரியாவுக்கு வாருங்கள்” தென் கொரிய அதிபருக்கு கிம் ஜாங்-உன்…
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தென் கொரிய அதிபரான மூன் ஜே-இன்னை வட கொரியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். கொரிய தலைவர்களுக்கிடையே பல பத்தாண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சந்திப்பாக இது இருக்கலாம். கொரியர்களால் "இதை செயலாற்றி காண்பிக்க முடியும்" என்று கூறும் மூன், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு…
முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை :செளதி மதகுரு
செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார். பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் மூத்த அறிஞர்கள்…