ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட ‘புலி’ பொம்மை

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் பண்ணையில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அனுப்பபட்ட நிலையில், அது வெறும் பொம்மை புலி என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, அபெர்டீன்ஷரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாட்டு கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீஸாருக்கு…

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய தாக்குதல் ஒரு…

பெய்ரூட், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினர் சிரிய அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக தற்காப்பிற்காக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள்…

பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு- ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு

பிரிட்டனின் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகுடிகளான 'பிரிட்டன்' மக்களின் நிறம் கருப்பு என்றும், அவர்களது விழிகள் நீல நிறத்தில் இருந்தன என்றும் கூறுகிறது ஒரு புதிய ஆய்வு. 1903 ஆம் ஆண்டு கண்டுடெடுக்கப்பட்ட, பிரிட்டனின் பழமையான எலும்புகூடான, செட்டர் இன மனிதனின் எலும்புக்கூட்டை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியது லண்டன்…

என்ன நடக்கிறது மாலத்தீவில்? – அ முதல் ஃ வரை

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தனது அதிகாரத்தை இறுகப் பற்றி கொள்ள விரும்புவதால் அந்த தீவு தேசத்தில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது. மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல, அப்துல்லா யாமீன் கயூம் அதிபராக…

டைனோசர்கள்: வளர்ச்சியே வீழ்ச்சிக்கு வழிவகுத்ததா?

டைனோசர்கள் தங்களின் வளர்ச்சியில் கண்ட வெற்றியே அதனை வீழ்ச்சியடைய செய்வதாக இருந்திருக்கலாம் என்று உலகம் முழுவதும் டைனோசர்கள் பரவியது பற்றிய ஆய்வு காட்டுகிறது. விண்கல் டைனோசர்களை தாக்கிய சம்பவத்திற்கு முன்னரே அவற்றின் வளர்ச்சி வீழ்ச்சியடைய தொடங்கியிருந்தது என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த டைனோசர்கள் பூமியிலுள்ள வசிப்பிடம் எல்லாவற்றையும்…

பெரும் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்க பங்குகள் மீண்டன

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் செவ்வாய் கிழமையும் 2% வீழ்ச்சியில் சந்தை துவங்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு நேர்மறை புள்ளிகளோடு சந்தை இயங்கிவருகிறது. திங்களன்று அமெரிக்காவில் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது ஆசியா மற்றும் ஐரோப்பா பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது. அமெரிக்க மத்திய…

பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ராவல்பிண்டி பாப்ரா பஜாரின் குறுகிய சந்துக்கள் அனைத்தும் வரலாற்றின் சுவடுகளையும் அதன் அழகியலையும் தாங்கி நிற்கின்றன. அந்த தெருக்கள் எங்கும் நிறைந்து இருக்கும் பழமை வாய்ந்த கட்டடங்கள் வரலாற்றின் கதைகளை விவரிக்கின்றன. இது அனைத்தையும் பொறுமையாக பார்த்தபடி, அது சொல்லும் கதைகளை உள்வாங்கியபடியே கையில் புகைப்பட கருவியுடனும், முதுகில்…

“இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு

இங்கிலாந்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வைக்கிங் ராணுவ படைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளதாகத் தெரிகிறது. டெர்பிஷைரின், ரெப்டானில் உள்ள செயிண்ட் வின்ஸ்டன் தேவாலயம்  அருகே நடந்த ஓர் அகழ்வாய்வில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 250 எலும்பு கூடுகள்…

மாலத் தீவில் ‘அவசர நிலை’ பிரகடனம்

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. இந்த அவசர நிலை அறிவிப்பானது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை தருவதோடு சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்யவும் உதவும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலத் தீவு அரசானது நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளதோடு…

மாலத்தீவில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது

மாலே, மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. 9 பேர் மீதும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மேலும்,…

சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யப் போர் விமானம்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் வடமேற்குப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பறந்த ரஷ்யாவின் சுகோய்-25 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற ஜிகாதிகள் கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாக கருதப்படும் இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி குதித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம்…

தடைகளை மீறி 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா: ஐ.நா.…

தன் மீது விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளை மீறி வடகொரியா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,300 கோடி ரூபாய்) அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவில் இருந்து…

ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை

ரஷ்யா அணு ஆயுத்தங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறிய அளவிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகவும் மோதல் போக்கான நடவடிக்கை என்று கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாரோவ், மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.…

லிபியா: அகதிகள் கப்பல் மூழ்கியதால் கரை ஒதுங்கிய 10 உடல்கள்,…

லிபியாவின் கடலோர பகுதியில் அகதிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 90 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஐ.நா கூறியுள்ளது. கடலில் மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அந்த படகு விபத்தில் இருந்து தப்பிய மூவர் கூறியுள்ளனர். அவர்களில் இருவர் லிபியாவைச் சேர்ந்தவர்கள். பத்து பேரின்…

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. வியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2016ம்…

பாரிய புதைகுழிகளில் 400 சடலங்கள்?

பல நூற்றுக்கணக்கான றோகிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 5 பாரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர் என, ஏ.பி செய்தி முகவராண்மை வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (01) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், இத்தாக்குதல்களிலிருந்து தப்பியவர்கள், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் என சுமார் 25 பேர், தாக்குதல்களின் பின்னராக எடுக்கப்பட்ட காணொளிகள்…

அரசியல் பிரிவு தலைவர் `பயங்கரவாதி` என அறிவிப்பு

பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை `பயங்கரவாதி` என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், இவர் ஆயுத சண்டைக்கு ஆதரவாக இருக்கிறார்…

சவுதியில் ஊழல் செய்த அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 107…

ரியாத் எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக திகழும் சவுதி அரேபியாவின் 32 வயது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ‘தொலைநோக்கு 2030’ என்னும் புதிய திட்டத்தை முன் வைத்து சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் எண்ணெய் உற்பத்தியில்…

குவாண்டனாமோ சிறை மூடும் திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு

கடும் சித்தரவதை நிகழ்த்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்காவின் குவாண்டனாமோ ராணுவ சிறையை மூடும் திட்டத்தை கைவிடுவதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் நிலவரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் உரைபாற்றியபோது, டிரம்ப் தனது முடிவை அறிவித்தார். கியூபாவில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த சிறையை மூட விரும்புவதாக, முன்னாள்…

குர்திஷ்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன

சிரியாவில் குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் ஒன்றான அஃப்ரின் மீதான துருக்கியின் தாக்குதல்கள், தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள், தொடர்ந்தும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதில் உயிரிழந்த குர்திஷ்களின் (போராளிகளும் மக்களும்) மரண வீடுகளில் ஒரு தொகுதி, நேற்று…

`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா

பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா. அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று…

கென்யா: தீயை அணைக்க நீரின்றி தவிக்கும் குடிசைப்பகுதி

கென்யாவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்று தீப்பிடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கென்யாவின் தலைநகரமான நைரோபியில் உள்ள லங்கடா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க மக்கள் கழிவு நீரை பயன்படுத்தினர்.…

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு

ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த நடைமுறை குறித்து கிறிஸ் போக்மென் விளக்குகிறார்.…