இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.
திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த இவர் இங்லீஷ் விங்லீஷ்‘ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் ஸ்ரீதேவி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் அங்கு பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஸ்ரீதேவி சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோனா வெங்கட் சொன்ன கதை அவரை மிகவும் கவர்ந்து விட்டதாம்.
இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின், கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கோனா வெங்கட் தெரிவித்துள்ளார்.
எங்கடா கோனா வெங்கட் ( கேன வெங்காயத்தை ) தேடி போறேங்க ? தமிழன் யாரும் கிடைக்கவில்லையா ? பிற மொழியிலே படம் எடுத்து தமிழ்நாட்டில் தமிழனை வைத்து வசூல் செய்வேங்க ,,போங்கடா!!!
ஸ்ரீ தேவி கட் அவுட்டுக்கு தமிழ் நாட்டில் பால் ஊற்றுவார்களா ?
தமிழர் நந்தா ,என்னை வைத்து காமடி பண்ணாதேங்க ஐயா ,,போங்கள் எனக்கு வெக்கமா இருக்கு ,ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
எப்படியோ அவரைக் கனவு கன்னியாகப் போட்டு யாரும் படம் எடுக்கப் போவதில்லை. ஒரு நடுத்தர பெண்ணாகத் தான் நடிப்பார். அது அவரது திறமை. பாராட்டுக்கள்!
நடிகர் தனுஸ் , மயிலை விரட்டி விரட்டி காதல் செய்வதுபோல் ஒரு காட்சியை கண்டேன்! ( கனவில்)