அஜித்துடன் மோதுவதில் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார் கார்த்தி.
அஜித்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
அதேபோல் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அஜித்துக்கு எதிராக கார்த்தி, ஞானவேல்ராஜா கூட்டணி காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறது.
அஜித் படத்தைவிட அதிகமான திரையரங்குகளில் கார்த்தி படத்தை வெளியிட மறைமுக வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆரம்பம் படத்துக்கான அட்வான்ஸ் பணத்தை திரையரங்கு அதிபர்களிடம் வசூலிக்கும் வேலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஈடுபட்டு வருகிறார்.
அஜித் பட வசூலை முறியடிக்க அட்வான்ஸ் பணமே வேண்டாம். படத்தை வெளியிட்ட பிறகு மொத்த வசூலில் 80% பணத்தை கொடுத்தால் போதும் என்று தியேட்டர்காரர்களை கன்வின்ஸ் செய்து வருகிறார் கார்த்தி.
ஏ.எம்.ரத்னத்தை கடன் சுமையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்தோடு ‘ஆரம்பம்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் அஜித்.
ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான ஞானவேல்ராஜா, இன்னொரு தயாரிப்பாளர் ரத்னத்துக்கு எதிராக வேலை செய்வதால் என்ன செய்வது எனப் புரியாமல் கையை பிசைந்து நிற்கிறார் ஏ.எம்.ரத்னம்.
கார்திக் உனக்கு ஏன் இன்த பிழைப்பு. உன் நடிப்பில் உனக்கு நம்பிக்கை இல்லையா? என்ன கேவழம்.
ஒருவனைக் கெடுத்து ஒருவன் வாழ வேண்டும் என்னும் நிலை சிவகுமார் குடும்பத்தில் இல்லை. இந்த செய்தியை ஏற்றுகொள்ள வேண்டும் என்னும் அவசியமும் இல்லை.
நடிகர்களின் அரசியல் வாழ்க்கை ”சதி செய்வது” இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது ! கார்த்திக் வெற்றி பெற்றால் அரசியலுக்கு வந்து விடலாம் !