கமலுக்கு அம்மாவாக‘மாஜி’ கனவு கன்னி

1-cinema Aகடந்த, 1950 – 60களில், பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர், வகீதா ரகுமான். கறுப்பு – வெள்ளை திரைப்பட காலத்தில், முடி சூடா ராணியாக வலம் வந்தவர். இவர் நடித்த அனைத்து படங்களுமே, பெரும் வசூலை குவித்தவை. தமிழிலும்,

‘அலிபாபாவும், 40 திருடர்களும், காலம் மாறிப் போச்சு’ ஆகிய படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட, 50 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அவரை, தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார், கமல். தன்னுடைய, ‘விஸ்வரூபம்–2’ படத்தில், வகீதாவுக்கு, முக்கிய கேரக்டர் கொடுத்துள்ளாராம். அதாவது, கமலின் அம்மாவாக நடிக்கிறாராம், வகீதா.